பங்குச்சந்தையில் பணம் போடணுமா? - Todays News

             Todays News

Political News, World News, Jobs, Education, District News, Current Affairs, Health Tips, Beauty Tips, Science, Technology, Samayal Tips.

Amazon

Nov 27, 2018

பங்குச்சந்தையில் பணம் போடணுமா?

பங்குச்சந்தையில் பணம் போடணுமா?


கையில் காசு இருக்கு. ஏதாவது செய்யணுமே என்று சிலர் எப்போதும் யோசித்துக் கொண்டிருப்பார்கள். பிசினஸ் தொடங்கும் அளவுக்கு இல்லை. இருக்கும் காசை டெபாசிட் செய்யலாம். ஆனால் வங்கி டெபாசிட், போஸ்ட் ஆபீஸ் வட்டி எல்லாம் போதவில்லை என்று யோசிப்பவர்களுக்கு பங்குச்சந்தை முதலீடு உதவும்.


* பங்குச்சந்தையில் நீங்களே முதலீடு செய்யலாம். இதற்கு டீமேட் அக்கவுண்ட் தேவை. இப்போது ஏறக்குறைய எல்லா வங்கியிலுமே இந்த டீமேட் கணக்கு வசதி உள்ளது. நீங்கள் சேமிப்பு கணக்கு வைத்திருக்கும் வங்கியிலேயே டீமேட் கணக்கு இருந்தால் திறந்து கொள்ளலாம். இது விரைவாக பரிவர்த்தனை செய்ய உதவும்.
* சேமிப்பு கணக்கில் ரொக்கமாக இருப்பதுபோல், டீமேட் கணக்கில் நீங்கள் வாங்கிய பங்குகள் வரவு வைக்கப்பட்டிருக்கும். உங்கள் பங்கு பரிவர்த்தனை விவரங்கள் இதில் பதிவாகும். அதோடு, பான் கார்டு மிக அவசியம்.
* அடுத்ததாக பங்கு வாங்கலாம். ஆனால் இது கடைக்குச்சென்று பொருள் வாங்கி வருவதுபோல் அல்ல. ஒரு பங்கு பரிவர்த்தனை புரோக்கரை நாடலாம். உங்களுக்காக அவர் பரிவர்த்தனை செய்வார். இதற்கான சிறு தொகையை கமிஷனாக பெற்றுக்கொள்வார்.

* பங்குச்சந்தையின் போக்கு தெரியாமல் ஏதோ ஒன்றை வாங்கிப்போடுவோம் என்று களம் இறங்கினால் ஆபத்துதான் மிஞ்சும். அதிர்ஷ்டத்தை நம்பி இறங்கக்கூடாது. பல ஆண்டாக பங்குச்சந்தையில் முதலீடு செய்த நண்பர்கள் மூலம் ஆலோசனை பெறலாம். நல்ல புரோக்கரை நாடுவது நலம்.
* முதலீடு செய்வதற்கு  முன்பே இழப்பு எவ்வளவு தாங்குவீர்கள் என்பதைத்தான் முதலில் முடிவு செய்ய வேண்டும். புரோக்கரிடம் சொல்லிவிட்டால் அந்த லிமிட் மாறாமல் அவர் பார்த்துக் கொள்வார்.
* புரோக்கர் பங்கு பரிவர்த்தனை கட்டுப்பாட்டு வாரியத்தில் (செபி) பதிவு செய்தவராக இருக்க வேண்டும். யாரோ ஒருவரை நம்பி ஏமாந்து விடாதீர்கள்.
* பங்குச்சந்தையில் லாபம் வந்தால் பணம் கொட்டும். அதேநேரத்தில் திடீர் சரிவு ஏற்பட்டால் லாபம் மட்டுமல்ல, போட்ட முதல் கூட பாதிக்கு மேல் மூழ்கிவிடும். இதுதான் பங்குச்சந்தையில் உள்ள பெரிய ரிஸ்க். எனவே, நீங்களாகவே பரிவர்த்தனை செய்வதாக இருந்தாலும், உலக சந்தைகள், கச்சா எண்ணெய், ரூபாய் மதிப்பு மற்றும் அரசியல் மாற்றங்கள், கம்பெனி நிதி நிலை அறிக்கைகள் என ஒவ்வொரு மாற்றமும் பங்குச்சந்தையில் எதிரொலிக்கும் என்பதை எப்போதும் கவனத்தில் வைத்திருக்க வேண்டும்.




No comments:

Amazon

அதிகம் படிக்கபட்டவை: Featured Posts

SBI Clerk Recruitment 2019: Dates

SBI Clerk 2019 Exam Highlights Exam Name                                      SBI Clerk 2019 Exam Conducting Body                 ...