
காலையில் எழுந்ததும் ஒவ்வொருவருக்கும் பலவித வேலைகள் இருக்க தான் செய்யும். ஒரு சிலர் எழுந்ததும் மொபைலை கையில் எடுத்து சாட் செய்வார்கள்.
சிலர் எழுந்ததும் பெட் காபி குடிப்பார்கள். சிலர் அவசர அவசரமாக எழுந்து அலுவலகத்துக்கு செல்வார்கள். இப்படி பலர் பலவகையான செயல்களை செய்வார்கள். இந்த அவசர வேலைகளின் போது நிச்சயம் நாம் காலை உணவை தவிர்த்து விடுவோம்.
அல்லது வெறும் பிரட், ஜாம் மட்டுமே சாப்பிடவும் செய்வோம். ஆனால், காலையில் சாப்பிடுவதற்கு முன்னர் வெறும் 3 பேரிட்சை பழங்களை 1 வாரத்திற்கு சாப்பிட்டு வந்தால் என்ன விதமான மாயாஜாலங்கள் உங்கள் உடலில் நடக்கும்னு தெரியுமா..? அதுவும் உச்சம் தலை முதல் உள்ளங்கால் வரையில் ஒரே வாரத்தில் ஏராளமான மாற்றங்கள் நடக்கும். வாங்க, என்னென்ன மாற்றங்கள் இந்த பேரிட்சை பழத்தால் நடக்குதுன்னு பார்ப்போம்.
அரேபிய பழம்..!
பொதுவாகவே நம் நண்பர்கள் சவுதி அரேபிய போன்ற நாடுகளுக்கு சென்றால் பேரிட்சை வாங்கி வருவது இயல்பு. நம்ம ஊரில் இருக்க மா, பலா, வாழையை போன்று அவங்க ஊரில் இந்த பேரிட்சை ரொம்ப பிரபலமானது.
இதை சுற்றி மிக பெரிய சந்தை அமைந்துள்ளதற்கு காரணம் இவற்றின் பயன்கள் தான். மருத்துவம், உணவு, அழகு பொருட்கள் போன்ற எண்ணற்ற முறையில் இதன் மீது முதலீடு செய்யப்பட்டுள்ளது.
ஒரு வாரம்- 3 பேரிட்சை..!
அப்படி என்ன இந்த ஒரு வாரத்திற்குள் மாறிவிட போகுதுனு யோசிக்கறவங்களுக்கு இதன் மகிமையை முதல்ல தெரிஞ்சிக்கோங்க. மற்ற உணவுகளை காட்டிலும் இதில் அதிக அளவில் தாதுக்களும், ஊட்டச்சத்துக்களும் உள்ளன.
100 கிராம் பேரீச்சையில் உள்ள சத்துக்கள் இதோ...
பொட்டாசியம்- 696 mg
நார்சத்து - 6.7 mg
மெக்னீசியம் 54 mg
கால்சியம் 64 mg
பாஸ்பரஸ் 62 mg
புரதம் 1.81 கிராம்
பொட்டாசியம்- 696 mg
நார்சத்து - 6.7 mg
மெக்னீசியம் 54 mg
கால்சியம் 64 mg
பாஸ்பரஸ் 62 mg
புரதம் 1.81 கிராம்
நோய்களை ஒழிக்க
பேரீச்சையில் உள்ள செலினியம், மக்னீஸ் மற்றும் மெக்னீசியம் உடலுக்கு அதிக வலிமையை தந்து நோய் எதிர்ப்பு சக்தி மண்டலத்தை உறுதியாக கட்டமைக்கிறது.
இதனால் உங்களுக்கு நோய்கள் எதுவும் வராமல் தடுக்கும். எனவே, மறந்திடமா 3 பேரீச்சைகளை காலையில சாப்பிடுங்க.
ஐன்ஸ்டீன் மூளைக்கு..!
பலருக்கு மூளை திடீரென்று அதிக சோர்வாக இருக்கும். இதோடு சேர்த்து தூக்கமும் பயங்கரமாக வர தொடங்கும்.
வெறும் வாரத்திற்கு 3 பேரீச்சையை சாப்பிட்டு வாங்க, அப்புறம் பாருங்க ஜெட்டு வேகத்துல உங்க வேலையெல்லாம் நடக்கும்.
சட்டென குறையணுமா..?
உடல் பருமனால் பாதிக்கப்பட்டவர்களை எளிதில் காப்பற்ற இந்த பேரீச்சை சிறந்த மருந்து. காலையில் 3 பேரீச்சைகளை சாப்பிடுவதால் சீக்கிரமே உடல் எடை குறைந்து விடும். அதோடு வயிற்றில் சேர்ந்துள்ள கொழுப்புகளையும் கரைய செய்து விடும்.
தினமும் நீங்கள் படும்பாடு..!
இந்த செரிமான பிரச்சினை பலருக்கு இப்போதெல்லாம் இருக்கிறது. இதை தொடர்ந்து மலச்சிக்கலும் வர தொடங்கும்.
ஒரு வாரத்திற்கு வெறும் 3 பேரீச்சை சாப்பிட்டு பாருங்க, இந்த கோளாறுகள் எல்லாமே நொடி பொழுதுல காணாம போயிடும். அதோடு சேர்த்து வயிற்று கோளாறுகள் எல்லாத்தையும் தீர்த்து விடும்.
இனிமையான தாம்பத்தியத்திற்கு
ஆண்களே, நீங்கள் பேரீச்சையை சாப்பிட்டு வருவதால் உங்கள் தாம்பத்தியம் மிக இனிமையாக அமைய கூடுமாம். அதுவும் இவற்றோடு சிலவற்றை சேர்த்து சாப்பிடுவதால் உங்களின் படுக்கையில் அதிக நேரம்ஆற்றலும் நீடித்து இருக்க முடியும்.
இதற்கு தேவையானவை...
தேன் அரை ஸ்பூன்
ஏலக்காய் பொடி சிறிது
பேரீச்சை 1 கையளவு
ஆட்டு பால் அரை கப்
தேன் அரை ஸ்பூன்
ஏலக்காய் பொடி சிறிது
பேரீச்சை 1 கையளவு
ஆட்டு பால் அரை கப்
தயாரிக்கும் முறை...
முதலில் பேரீச்சையை அரைத்து கொண்டு ஆட்டு பாலுடன் கலந்து கொள்ள வேண்டும். அடுத்து இவற்றுடன் தேன் மற்றும் ஏலக்காய் பொடி சிறிது சேர்த்து நன்றாக கலந்து குடித்தால் ஆண்களின் செயல்திறன் படுக்கையில் அதிகரிக்கும்.
புற்றுநோய்க்கு டாட்..!
நம் உடலில் புற்றுநோய் செல்களை வளர விடாமல் தடுக்க கூடிய ஆற்றல் இந்த பேரீச்சைக்கு உள்ளது. தினமும் 3 பேரீச்சையை சாப்பிட்டு வந்தால் புற்றுநோயில் இருந்து தப்பித்து கொள்ளலாம்.
அதோடு பெருங்குடலில் சேர்ந்துள்ள அழுக்குகளையும் இது சுத்தம் செய்ய கூடிய ஆற்றல் கொண்டதாம். எனவே, பெருங்குடல் புற்றுநோயும் உங்களுக்கு வராது.
உங்கள் மனைவிக்கும் தான்..!
பொதுவாகவே கர்ப்ப காலத்தில் இருக்க கூடிய பெண்கள் இரும்புசத்து அதிகம் கொண்ட உணவு பொருட்களை சாப்பிட வேண்டும் என மருத்துவர்கள் பரிந்துரைப்பார்கள்.
பிரசவத்திற்கு 4 வாரத்திற்கு முன்பிலிருந்து பேரீச்சைகளை எடுத்து கொண்டால் பிரசவம் சுகமாக நடப்பதற்கு இது வழி வகுக்கும்.
கருங்கல் போல இதயம் வேண்டுமா..?
உங்கள் இதயம் எந்தவித பாதிப்பும் இல்லாமல் அதிக காலம் செயல்பட வேண்டுமென்றால் அதற்கு இந்த பேரீச்சை வைத்தியம் மிக அற்புதமாக பயன்படும்.
குறிப்பாக ரத்தத்தில் இருக்க கூடிய கெட்ட கொலஸ்ட்ராலை வெளியேற்றி மாரடைப்பு, இதய நோய்கள், ரத்த நாளங்கள் பாதிப்பு ஆகியவற்றில் இருந்து உங்களை காக்கிறது.
ரத்த சோகையா..?
உடல் முழுக்க எதோ வெளிர்ந்தது போன்று இருந்தால் அதுதான் ரத்த சோகைக்கான அறிகுறியாகும். இந்த பிரச்சினையில் இருந்து உங்களை காக்க பேரீச்சை அதிகம் உதவுகிறது.
தினமும் 3 பேரீச்சை சாப்பிட்டு வந்தால் ரத்த சோகை வந்த இடம் தெரியாமல் காணாமல் போய்விடும்.
வயதான தோற்றத்தை போக்க
சின்ன வயசிலே வயதான தோற்றம் வந்துடுச்சா..? முக முழுக்க சுருக்கங்களாக உள்ளதா..? இதை சரி செய்ய பேரீச்சை வைத்தியம் போதும்ங்க.
தினமும் இதை தொடர்ந்து சாப்பிட்டாலோ அல்லது முகத்தில் தடவினாலோ முகத்தின் சுருக்கங்கள் மறைந்து விடும்.
3 பேரீச்சை ரகசியம்..!
காலையில் 3 பேரீச்சையை சாப்பிட்டு வந்தால் உங்களுக்கே இதன் மகத்துவம் என்ன என்பது புரிந்து விடும். மேற்சொன்ன அற்புதங்கள் அனைத்துமே உங்களுக்கு எந்தவித பெரிய செலவும் இல்லாமலே இந்த பேரீச்சை எளிமையாக தருகிறது.
source: boldsky.com
No comments:
Post a Comment