குழந்தைகள் பதின் வயதை (டீன் வயது) அடைவதற்கு முன் பெற்றோர்கள் உருவாக்கிக் கொள்ள வேண்டிய 10 பழக்க வழக்கங்கள்.....
பெற்றோராக இருப்பது என்பது ஒரு கலை. உண்மையிலேயே பெற்றோர் என்ற கலையில் வல்லுனராவது என்பது மிகவும் சிரமமான விஷயம். எல்லாவற்றையும்விட, பதின் வயதில் உள்ளவர்களுக்கு பெற்றோராக இருப்பது என்பது எளிதல்ல. பிள்ளைகள் பதின்வயதில் பிரச்சனை உண்டாக்குகிற செயல்களை செய்வதற்காக, அவர்களையோ அல்லது அவர்களின் பெற்றோர்களையோ குற்றம் சொல்லக்கூடாது. ஏனெனில் அது அவர்கள் கடந்து செல்கிற உடலளவிலான மற்றும் மனதளவிலான மாற்றங்களின் விளைவாக இருக்கலாம். வளர்ச்சி பற்றிய ஆராய்ச்சியை செய்கின்ற மனோவியல் நிபுணர்கள் பதின் வயதுப் பிள்ளைகளின் நடத்தை பற்றிய பல கோட்பாடுகளை வெளியிட்டுள்ளனர். அதில் மனித இனம் அடங்காத நிலை மாற்றத்தில் இருக்கும்போது, வளரிளம் பருவத்தினர் அந்த காலத்தோடு ஒத்துப் போகின்றனர்.
ஸ்டான்லி ஹால் என்பவர், வளரிளம் பருவத்தினரின் மனநிலை பற்றிய
ஆராய்ச்சியை முன்னெடுத்த போது, பல அறிவியல் முறைகளைப் பயன்படுத்தி அவர்களை
பற்றி ஆராய்ச்சி செய்தார். ஹால், வளரிளம் பருவத்தினரின் பற்றிய காலத்தை
விவரிக்கும்போது கடும்கோபம் மற்றும் மன அழுத்தம் என்று விவரித்தார்.
வளரிளம்
பருவம் என்பது குழந்தை பருவத்திற்கும் மற்றும் வயது வந்த பருவத்திற்கும்
இடைப்பட்ட வளர்ச்சி மாற்றமே ஆகும். அவர்களைப் பற்றிய சில எதிர்மறை
கருத்துகளை தவிர, அவர்கள் எப்பொழுதும் ஆற்றல் உடையவர்களாகவும், சிந்திக்க
கூடியவர்களாகவும் மற்றும் சிறந்தவர்களாகவும், எது நியாயமானது மற்றும்
சரியானது என்று அறிவதில் ஆர்வம் உள்ளவர்களாகவும் இருக்கிறார்கள். வளரிளம்
பருவ காலம் பெற்றோர்களுக்கும், பிள்ளைகளுக்கும் இடையே சச்சரவுகளை
உருவாக்கும் காலமாக இருந்தாலும், இந்தப் பருவம் என்பது குழந்தைகள்
பிற்காலத்தில் தனிப்பட்ட நபர்களாக மாறுவதற்கு பெற்றோர்கள் உதவும் காலமாக
இருக்கிறது.
அந்த காலம் பிள்ளைகளுக்கு, மென்மையானதாகவும் மற்றும் ஆரோக்கியமான
மாற்றமாகவும் இருப்பதை உறுதி செய்வது அவசியம். பிள்ளைகள் பல தடைகளையும்,
தடுப்பு சுவர்களையும் எதிர்கொள்ள வேண்டி இருப்பதால் அவர்களுக்கு அதை
எளிதாக்குவதற்கு, பெற்றோர்கள் பொறுப்பாக செயல்படுவது சற்று கடினம் தான்.
எது சரியான மற்றும் பயனுள்ள அணுகுமுறை என்றும், அவை எப்பொழுது
பின்பற்றக்கூடியவை என்பதையும் அறிந்து கொள்வதுதான் சிறந்த பெற்றோராவதற்கு
திறவுகோலாகும்.
- கல்வி:
பெற்றோர்கள் தங்கள் பணியை திறம்படச்
செய்வதற்கு, இந்த பருவத்தில் பிள்ளைகளுக்கு ஏற்படும் உடல்ரீதியான மற்றும்
மனரீதியான மாற்றங்களை பற்றிய அறிவும், புரிந்து கொள்ளுதலும் அவசியம். இந்த
மாற்றங்களைப் பற்றி பெற்றோர்கள் தெரிந்திருப்பது அவர்கள் குழந்தைகளின்
தேவைகளை அறியவும் மற்றும் அவர்களுக்கு இந்த மாற்றங்களைப் பற்றி கற்றுக்
கொடுக்கவும் உதவும். இது மிகவும் முக்கியமான விஷயம். ஏனென்றால் குழந்தைகள்
இந்த பருவத்தில் தங்கள் நண்பர்கள் தங்களை பார்க்கும் விதத்தையும், அதில்
தாங்கள் சரியாக பொருந்தவும் முயற்சி செய்வார்கள். முடிவுகள் எடுக்கும்
விஷயத்தில், பிள்ளைகள் தங்கள் பெற்றோர்களை விட தங்கள் நண்பர்களையே
முக்கியமான நபர்களாக கருதுகின்றனர்.
பிள்ளைகள் தங்கள் தோற்றத்தையும் தனித்துவத்தையும் மாற்றுவதற்காக முயற்சி
செய்கின்றனர். மற்றும் தங்கள் நண்பர்களை விட தாங்கள் வேறுபட்டு
காணப்படுவது, அவர்களுக்கு பெற்றோர்களுடன் சச்சரவுகளை ஏற்படுத்துவதுடன்,
அவர்களை துன்பத்தில் ஆழ்த்தி விடுகிறது.
2.சுதந்திரம் மற்றும் தனிமை:
பதின்
வயதினரின் பிரதானமான கொள்கை என்னவென்றால், சுதந்திரமாக இருக்க விரும்புவது
தான். பிள்ளைகள் தங்கள் பெற்றோர்களை விட்டு சற்று தள்ளி இருக்க
விரும்புவார்கள். தாங்கள் சொல்லுவதற்கு அனுசரித்துப்போகும் பிள்ளைகள்
திடீரென்று தங்களை உறுதியாக்கி கொண்டு, தங்கள் கருத்துக்களை கடுமையாகவும்,
தங்கள் பெற்றோர்களின் கட்டுப்பாட்டிற்கு விரோதமாகவும் கலகம் பண்ணுவதை
பெற்றோர்கள் காணலாம். பிள்ளைகள் பகுத்தறிவுடனும், சுருங்கிய மனதுடனும்
யோசிப்பதே அதற்கு காரணம். அவர்கள் தங்களுக்கான ஒழுக்க நெறிமுறைகளை தாங்களே
உருவாக்கிக் கொள்கின்றனர்.
பெற்றோர்கள், தங்கள் பிள்ளைகளுக்கு போதுமான இடம் தருவதுடன், அதேவேளையில்
நீங்கள் கொடுத்த இடத்தை அவர்கள் பயன்படுத்துவதையும் கவனிக்க வேண்டும்.
உங்கள் பிள்ளையின் சுதந்திரத்தில் பிரச்சினை ஏதும் உருவாகும் வரை நீங்கள்
தலையிட வேண்டாம். உங்கள் பிள்ளையின் வாழ்க்கையில் நடக்கும் விஷயங்கள்
எல்லாவற்றையும் பகிர்ந்து கொள்ள வேண்டுமென்று எதிர்பார்க்காதீர்கள்.
அவர்களின் சுதந்திரத்திற்கு மதிப்பளித்து அவர்களுடன் நம்பிக்கை வளர்த்துக்
கொள்ளுங்கள். பிள்ளைகள் மீது நீங்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை அவர்கள்
குலைக்காமல் இருந்தால், அவர்களின் சுதந்திரத்தை அவர்கள் அனுபவிக்கலாம்
என்று சொல்லி புரிய வையுங்கள்.
3.பெற்றோர்களின் வழிநடத்துதல்:
பதின் வயதினர் தங்கள் உலகை,
தலைமுடிக்கு சாயம் பூசிக் கொள்ளவும், தங்கள் நகங்களுக்கு கருப்பு வர்ணம்
பூசவும் அல்லது வழக்கத்திற்கு மாறான ஆடை அணிவது போன்ற எல்லா வழிகளிலும்
உலகை சுற்றி அனுபவிக்க விரும்புவார்கள். அவர்களின் முடிவை எதிர்ப்பதற்கு
முன், இரு முறை யோசியுங்கள். உங்கள் பிள்ளைகள் ஏன் அவ்வாறு செய்ய
விரும்புகிறார்கள் என்று கேட்டு அவர்களைப் புரிந்துகொள்ள முயலுங்கள்.
தீங்கு விளைவிக்காத, தற்கால செயல்களை செய்ய அனுமதியுங்கள்.
புகையிலை,
போதை மருந்துகள், ஆல்கஹால் மற்றும் தீங்கு விளைவிக்கும் பொருட்களை
பயன்படுத்துவதற்கு கட்டாயம் எதிர்ப்பு தெரிவியுங்கள். உங்கள் பதின் வயது
பிள்ளைகளுக்கு இந்த கொடுமையான பொருள்களால் ஏற்படும் பாதிப்புகளை பற்றி
புரிந்து கொள்ள உதவுங்கள்.
4.பார்க்கும் நிகழ்ச்சிகளில் கட்டுப்பாடு விதியுங்கள்:
இந்த
பருவத்தில் பிள்ளைகள், வெளிப்படையான பாலியல் பற்றிய தகவல்களுக்கு எளிதில்
அடிமையாகிவிடுவார்கள். உங்கள் பதின் வயதுப் பிள்ளைகள் என்ன பார்க்கிறார்கள்
என்பதை கவனிக்கும் பொறுப்பை, பெற்றோரான நீங்கள் தான் எடுத்துக் கொள்ள
வேண்டும். தொலைக்காட்சி மற்றும் இணையதளத்தை பார்ப்பதற்கு வரம்பு உள்ளது
என்று அவர்களுக்கு புரிய வையுங்கள். மற்றும் இவற்றை அந்தரங்கத்தில்
பயன்படுத்த அனுமதி இல்லை என்றும், நீங்கள் பார்ப்பது குறித்து
எச்சரிக்கையாய் இருந்து, அதை அவர்களுக்கு முன்பாக படித்து காண்பியுங்கள்.
ஊடகங்களில் வரும் பாதிக்கின்ற மற்றும் தீங்கு விளைவிக்கக் கூடிய விஷயங்களை
அவர்கள் பார்க்காதவாறு கவனித்துக்கொள்ளுங்கள். தொழில்நுட்பங்களை
பயன்படுத்துவதற்கு சில மணி நேரங்கள் தான் அனுமதி என்று சொல்லுங்கள்.
5.அடிப்படை விதிகளை அமையுங்கள்:
பதின் வயதுப் பிள்ளைகளுக்கு
போதுமான உறக்கம் என்பது மிகவும் முக்கியமானது. உறங்கும் நேரத்தை முறையாக
அமைத்து அதை பின்பற்றுவதை உறுதி செய்யுங்கள். குறைந்தது 8-9 மணி நேர
உறக்கம் என்பது கட்டாயம் தேவை. உங்கள் பிள்ளைகள் இந்த விதிகளை
பின்பற்றுவதற்கு ஊக்குவியுங்கள். உங்கள் பதின் வயதுப் பிள்ளைகள் மீது
அதிகமான விதிகளை திணிக்க வேண்டாம். அவர்களின் இடத்தில் நீங்கள் இருந்து
பார்த்து விதிகளை அதற்கேற்றவாறு அமையுங்கள்.
6.எதிர்பார்ப்புகள்:
உங்கள்
பதின் வயதுப் பிள்ளைகளுக்கு ஏற்றவாறு உங்கள் எதிர்பார்ப்புகள் உரியதாக
இருக்கவேண்டும். அல்லது இவை மனநல ஆரோக்கியத்தில் குறைபாடுகளை
உண்டாக்கிவிடும். பதின் வயதுப் பிள்ளைகள் தங்கள் பெற்றோர்களை புரிந்து
கொண்டு, அவர்களின் தேவைகளான நல்ல நடத்தைகள், படிப்பில் சிறந்த தரம்
பெறுவது, மற்றும் விதிகளுக்கு கீழ்படிவது போன்ற எதிர்பார்ப்புகளை
நிறைவேற்றுவார்கள். உங்களின் எதிர்பார்ப்புகள் உரிய காரணம் இன்றி
இருந்தால், நீங்கள் அவர்களை சரியாக புரிந்துகொள்ளவில்லை என்று அவர்கள்
வருந்துவார்கள்.
7.பாலியல் கல்வி:
பதின் வயதுப் பிள்ளைகள் பெரும்பாலும் பல
விஷயங்களை ஆராய்ந்து, அனுபவிக்க வேண்டும் என்று விரும்புவார்கள். அவைகள்
சில நேரங்களில் ஆபத்தான சோதனைகளாகவும் மற்றும் விளைவிப்பதாகவும்
இருக்கலாம். அவர்களுக்கு பாலியல் உறவு, ஆல்கஹால் மற்றும் போதை மருந்துகள்
பற்றி சொல்லி புரிய வையுங்கள். இவற்றைப் பற்றி பேசுவதை தவிர்த்து
விடாதீர்கள். அவர்கள் இந்த விஷயங்களை பற்றி அறிய வரும் போது, அவர்கள்
பொறுப்புணர்ச்சியுடன் செயல்பட அவர்களுக்கு இது உதவும். உங்கள் பிள்ளைகளின்
நண்பர்களை பற்றி தெரிந்து கொண்டு அடிக்கடி அவர்களுடன் பேசி உங்கள்
பிள்ளைகளின் பாதுகாப்பான சூழலை உறுதி செய்யுங்கள். அவர்களின் பெற்றோருடனும்
பேசுங்கள். இதனால் உங்கள் பதின் வயதுப் பிள்ளைகள் தாங்கள்
கண்காணிக்கப்படுகிறோம் என்று கவலையுற மாட்டார்கள்.
8.உறுதுணையாக இருங்கள்:
உங்கள்
பதின் வயதுப் பிள்ளைகள் உங்களிடம் ஏதேனும் திட்டத்துடனும் அல்லது
யோசனையுடனும் வந்தால், அதை எதிர்மறையான கருத்துகள் சொல்லி எதிர்த்து
மறுக்காதீர்கள். இது அவர்களை சோர்வுக்குள்ளாக்கி, அவர்களின் தன்னம்பிக்கையை
இழந்து விட செய்யும். எப்பொழுதும் உங்கள் பிள்ளைகளுக்கு உறுதுணையாக
இருந்து ஊக்கம் அளியுங்கள். இது தீங்கு தரக்கூடிய சூழ்நிலைகளில் இருந்து
விலக அவர்களுக்கு உதவும்.
9.எச்சரிக்கைக்கான அடையாளங்களை அறிந்து கொள்ளுங்கள்:
பதின்வயதில்
மாற்றம் ஏற்படுவது என்பது இயல்புதான். ஆனால் அவர்கள் நடத்தையிலும்,
தோற்றத்திலும் தீவிர மாற்றங்கள் வருவது என்பது எச்சரிக்கையுடன் கவனிக்க
வேண்டியவை. உங்கள் பிள்ளைகளுக்கு ஏற்படும் புதுமையான சிக்கல்களை சரிசெய்ய
உதவுவதற்கு, நீங்கள் எப்பொழுதும் அவர்களுடன் தயாராக இருங்கள். அவர்களின்
உடல் ஆரோக்கியத்தை அருகிலிருந்து கவனித்துக் கொள்ளுங்கள். உடற்பயிற்சிகளை
செய்யவும் மற்றும் உடல் ரீதியாக அவர்களை எப்பொழுதும் சுறுசுறுப்பாக
வைத்திருப்பதையும் உறுதி செய்யுங்கள். பதின் வயதுப் பிள்ளைகள் வளருவதற்கு
இவை மிகவும் முக்கியம். போதுமான அளவு உணவு அவர்களுக்கு அளிப்பதையும்
மற்றும் அவர்கள் தேவைகள் சந்திக்கப்படுவதையும் உறுதி செய்யுங்கள்.
10.உறுதியாக இருங்கள்:
பதின்வயது
என்பது ஏற்றத்தாழ்வு நிறைந்த ஒரு நிலைதான். நீங்கள் உங்கள் பிள்ளைகளுடன்
உறுதியாகவும், தைரியமாகவும் இருங்கள். குழந்தைகளுடன் எல்லாவற்றிலும்
பங்கேற்று, எல்லாவற்றையும் அவர்களுடன் சேர்ந்து கையாளுகிறீர்கள் என்பதையும்
அவர்களுக்கு உணர்த்துங்கள். உங்கள் பிள்ளையின் கடுமையான நடத்தையின்
காரணமாக ஒருபோதும் பின்வாங்காதீர்கள். உங்கள் பிள்ளையின் நடத்தையை
புரிந்துகொண்டு அதற்கேற்றவாறு பதிலளிக்க முயற்சி செய்யுங்கள்.
ஒவ்வொரு
குழந்தையும் மாறுபட்டவர்கள் மற்றும் அவர்களை எதிர்கொள்ள பெற்றோர்கள்
பயன்படுத்தும் முறைகளும் மாறுபட்டவை. உங்கள் குழந்தைக்கு நீங்கள்தான்
பொறுப்பு என்பதையும், மேலும் நீங்களும் ஒரு காலத்தில் பதின் வயதை கடந்து
வந்துள்ளீர்கள் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்.
By - Dr. Rachna Singh
Source< https://m.dailyhunt.in/news/india/tamil/momspresso+tamil-epaper-momsptam/kuzhanthaikal+bathin+vayathai+deen+vayathu+adaivatharku+mun+berrorkal+uruvakkik+kolla+vendiya+10+bazhakka+vazhakkangal-newsid-103070337 >
No comments:
Post a Comment