தமிழ் சினிமா 2018: இந்தாண்டின் சிறந்த அறிமுக நடிகர்கள் - Todays News

             Todays News

Political News, World News, Jobs, Education, District News, Current Affairs, Health Tips, Beauty Tips, Science, Technology, Samayal Tips.

Amazon

Dec 22, 2018

தமிழ் சினிமா 2018: இந்தாண்டின் சிறந்த அறிமுக நடிகர்கள்



தமிழ் சினிமாவுக்கு இந்தாண்டு, முன்பு எப்போதும் இல்லாத வகையில் சிறப்பான ஆண்டாக தான் அமைந்துள்ளது.

 எந்த படம் வெளியானாலும் இப்படி ஒரு படம் பார்த்ததே இல்லை என தமிழ் சினிமாவை அடுத்தக்கட்டத்துக்கு கொண்டு செல்லும் என கருத்துக் கூறும் அளவுக்கு பல சிறந்த படங்கள் வெளியாகின. குறிப்பாக பல சிறந்த புதுமுக நடிகர்களும் தமிழ் சினிமாவுக்கு கிடைத்துள்ளனர்.


அவ்வாறு இந்தாண்டு தமிழ் திரையுலகில் நுழைந்து அடுத்தடுத்த ஆண்டுகளில் வெற்றிகரமாக வலம் வருவார்கள் என எதிர்பார்க்கப்படும் நடிகர்கள் பற்றி பார்ப்போம்.

ஆதித்யா பாஸ்கர்: படம் வெளியாகி சில மாதங்கள் ஆகியநிலையில் 96 படத்தில் இருந்து ரசிகர்கள் வெளியேவரவில்லை. அதற்கு விஜய் சேதுபதி, திரிஷா, படத்தின் கதை என பல காரணங்கள் இருக்கின்றன. அதில் ஆதித்யா பாஸ்கருக்கும் முக்கியமான பங்கு இருக்கிறது. விஜய் சேதுபதியின் இள வயது கதாபாத்திரத்தில் நடித்திருந்த ஆதித்யா பாஸ்கர் தற்போது டீன் பெண்களின் க்ரஷ்ஷாக இருக்கிறார்.
நடிகர் எம்.எஸ்.பாஸ்கரின் மகனான இவர், தந்தையை போலவே... அதுவும் முதல் படத்திலேயே அனைவரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளார். குட்டி ராம் என செல்லமாக அழைக்கப்படும் ஆதித்யா பாஸ்கர் இப்போது இன்ஸ்டாகிராமில் ஹிட்டடித்து வருகிறார். இந்த பையன் வளர்ந்த விஜய் சேதுபதி தான் என்பதை நம்ப வைக்கும் வகையில் சூப்பராக நடித்திருந்தார் ஆதித்யா. குறிப்பாக விஜய் சேதுபதியின் மாணவிகளிடம் திரிஷா சொல்லும் பிளாஷ்பேக் சீனில் ஆதித்யா வரும் ஃப்ரேம்கள் அனைத்தும் அத்தனை அழகு.


கவுரி
குட்டி ராம்மை விட குட்டி ஜானு இன்ஸ்டன்ட் டிரெண்ட் ஆகி விட்டார். அழகு மட்டும் அல்லாமல் நடிப்பிலும் அசத்தியிருந்தார் கவுரி. இவரும் தற்போது இன்ஸ்டா ஹிட் தான். அது மட்டும் அல்லாமல் இவர் கொடுக்கும் பேட்டிகள் அனைத்தும் இவரது க்யூட்டான முகபாவனைகளுக்காகவே வைரலாகி வருகின்றன. ஜானு போல இன்னும் நிறைய அழகான கதாபத்திரத்தில் நடித்து ரசிகர்களை கவர குட்டி ஜானுவை பூங்கோத்து கொடுத்து வரவேற்கலாம்.


சாய் பல்லவி: மலர் டீச்சர் தென்னிந்தியாவுக்கு பழகிய முகம் என்றாலும் கோலிவுட்டுக்கு புதுமுகம் தான். தமிழ் பெண்ணான சாய் பல்லவியின் நேரடி தமிழ் படமான தியா இந்தாண்டு தான் வெளியானது.

தனது வயதை விட முதிர்ச்சியான கதாபத்திரத்தில் மிகவும் அழகாக நடித்திருந்தார் சாய் பல்லவி. இவரைப்பற்றி அதிகம் விவரிக்க வேண்டிய அவசியம் இல்லை. தற்போது மாரி 2 படத்தில் தனுஷுடன் சேர்ந்து நடித்துள்ளார். படத்தின் மிக முக்கிய கதாபத்திரமான அரத்து ஆனந்தி பற்றி அனைவரும் பேச தொடங்கி விட்டனர். பிறகென்ன இனி பல்லவி அலை கோலிவுட்டில் தொடரும்...


ரைசா வில்சன்: பிக்பாஸ் டூ சினிமாவில் பர்ஸ்ட் ஹிட் ரைசா தான். நம்ம ரைசாவா இது என்று ஆச்சர்யப்படும் அளவுக்கு பியார் பிரேமா காதல் படத்தில் ரைசாவின் நடிப்பு பாராட்டப்பட்டது.
முதல் படமே நாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படமாக தேர்வு செய்தது சிறப்பு. அடுத்ததாக பாலாவின் வர்மா படத்தில் முக்கியமான காபத்திரத்தில் நடித்திருக்கிறாராம். ரைசா ஆர்மி உயிர்ப்போடே இருக்கட்டும்!


யூமா குரோஷி: பாலிவுட் நாயகியாக யூமாவுக்கு ரஜினியின் காதலி என்ற செம காதபாத்திரத்தை கொடுத்து வரவேற்றுள்ளது தமிழ் சினிமா.
ஜரினாவாக காலா படத்தில் நடித்தவர். இவர் ரஜினியை எதிர்த்து நின்று பேசும் போது ரசிகர்கள் ரசித்தார்கள் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். இதே போல வெயிட்டான கதாபத்திரத்தில் யூமா நடிப்பார் என்று நம்பலாம்.


அஞ்சலி பட்டேல்: கலை சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக இருந்த அஞ்சலி பட்டேலும் ரஞ்சித்-ரஜினி என்ற மாஸ் காம்போவில் அறிமுகமானார்.
இது எங்க இடம்... எங்கயும் போக முடியாது என திரையில் இவர்கத்தும் காட்சியில் நிஜ போராளியாகவே தோன்றி இருப்பார். உண்மையில் போராளியும் கூட.


அனுராக் கஷ்யப்: பாலிவுட் களத்தில் மாறிய முக்கியமான இயக்குநர்களுள் ஒருவர் அனுராக் கஷ்யப். இந்தாண்டு நயன்தாராவின் இமைக்கா நொடிகள் படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு வந்துள்ளார்.
மிரள வைக்கும் வில்லன் பாத்திரத்தில் அத்தனை கச்சிதமாக நடித்திருந்தார் அனுராக். இனியும் நடிப்பை தொடர்வாரா என்பது தெரியவில்லை. ஆனால் நடித்தால் நல்லா இருக்கும் என்கிறோம்.


டொவினோ தாமஸ்: மலையாள சினிமாவின் தற்போதை மக்கள் செல்வன் டொவினோ தாமஸ். எந்த காபத்திரத்தில் நடித்தாலும் செட் ஆகிறாருப்பா.. என்று ஆச்சர்யப்பட வைக்கும் டொவினோ, தற்போது கோலிவுட்டுக்கு வந்துவிட்டார்.
இவரது முதல் தமிழ் படமான அபியும், அனுவும் பெரிய வெற்றியை பெறவில்லை. ஆனால் மாரி 2வின் பீஜா கதாபத்திரத்தில் நடித்து கவனம் ஈர்த்துள்ளார். இவரது முந்தைய வரலாற்றை வைத்து பார்க்கும் போது சிறப்பான கதைகளில் நடித்தால் தமிழில் இவருக்கு சிறப்பான இடம் இருக்கும் என்று நம்பலாம்.


நமிதா பிரமோத்: மலையாளத்தில் பல படங்களில் நடித்தவர் நடிகை நமிதா பிரமோத். ஆனால் இந்தாண்டு தான் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். ரீமேக் படமான நிமிர் திரைப்படத்தில் உதயநிதி ஸ்டாலினுக்கு ஜோடியாக நடித்த இவர் கிடைத்த இடத்தில் எல்லாம் சிறப்பாக நடித்திருப்பார்.
இந்த படத்திற்கு பிறகு எந்த தமிழ் படத்திலும் இவர் ஒப்பந்தம் ஆகவில்லை என்றாலும் கிடைத்தால் அசத்துவார் என்பதில் சந்தேகம் இல்லை.


இவானா: முதல் படமே இயக்குநர் பாலாவின் படம் இவானாவுக்கு. ஏன் இந்த படத்திற்கு இவரை பாலா தேர்வு செய்தார் என்பதற்கு இவரது நடிப்பின் மூலம் இவான பதில் அளித்து இருப்பார்.


தினேஷ் குமார்: நடனத்தில் கலக்கி வந்த மாஸ்டர் தினேஷ் இந்தாண்டு குப்பை கதை மூலமாக நடிப்பிலும் முத்திரைப்பதித்துள்ளார். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் பலர் இவரது நடிப்பை பாராட்டினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


ஜாக்லின்: சின்னத்திரையில் கலக்க போவது யாரு நிகழ்ச்சியில் கலக்கி கொண்டு இருந்த ஜாக்கிலின் கோலமாவு கோகிலா படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமாகி இருந்தார். நயன்தாராவின் தங்கையாக திரையில் தோன்றி கவனம் பெற்றுவிட்டார்.
இந்த படத்திற்கு ஏன் சோளமாவு சோபி என்று பெயர் வைக்கவில்லை என்று இவரது ரசிகர்கள் டிரெண்டாக்கி கொண்டு இருந்தது எல்லாம் வரலாறு.


தர்ஷன்: சிவகார்த்திகேயன் தயாரிப்பில் சமீபத்தில் வெளியாக செம ரெஸ்பான்ஸ் பெற்று கான படத்தின் மூலம் அறிமுகமாகி இருப்பவர் தர்ஷன்.
ஒத்தையடி பாதையில பாடலில் உருகும் தர்ஷனுக்கு ரசிகைகள் அதிகரித்து வருகிறார்களாம்.


No comments:

Amazon

அதிகம் படிக்கபட்டவை: Featured Posts

SBI Clerk Recruitment 2019: Dates

SBI Clerk 2019 Exam Highlights Exam Name                                      SBI Clerk 2019 Exam Conducting Body                 ...