மும்பை:
நடப்பு நிதியாண்டின், அக்டோபர் - டிசம்பர் வரையிலான மூன்றாவது காலாண்டில், நாட்டின் ஏற்றுமதி வளர்ச்சி, 7 சதவீதமாக இருக்கும் என, எக்சிம் பேங்க் மதிப்பிட்டு உள்ளது.இது குறித்து, இவ்வங்கி வெளியிட்ட அறிக்கை:நடப்பு, 2018- - 19ம் நிதியாண்டின், அக்டோபர் - டிசம்பர் காலாண்டில், ஏற்றுமதி, 8,239 கோடி டாலராக உயரும். இது, கடந்த நிதியாண்டின், இதே காலாண்டில், 7,700 கோடி டாலராக இருந்தது.இதே காலத்தில், எண்ணெய் சாராத பொருட்கள் ஏற்றுமதி, 7.20 சதவீதம் வளர்ச்சி கண்டு, 6,665 கோடியில் இருந்து, 7,145 கோடி டாலராக உயரும்.வங்கி, பிரத்யேக கணக்கீடு மூலம், நாட்டின் எற்றுமதி குறித்த புள்ளிவிபரத்தை கணித்துள்ளது. அதன்படி, மதிப்பீட்டு காலாண்டில், நாட்டின் ஏற்றுமதி வளர்ச்சி, 7 சதவீதமாக இருக்கும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.கடந்த, நவம்பரில், ஏற்றுமதி வளர்ச்சி, 0.8 சதவீதமாக குறைந்திருந்தது. இது, அக்டோபரில், 17.86 சதவீதமாக இருந்தது.பொறியியல் சாதனங்கள், நவரத்தினங்கள் மற்றும் ஆபரணங்கள் துறையின் ஏற்றுமதி சரிவால், நவம்பரில், ஒட்டுமொத்த ஏற்றுமதி வளர்ச்சி குறைந்துள்ளது.
No comments:
Post a Comment