அடிச்சு தூக்கு பாடல் செய்த சாதனை
அஜித் - சிவா கூட்டணியில் உருவாகி இருக்கும் ‘விஸ்வாசம்’ படத்தின் ‘அடிச்சு தூக்கு...’ என்ற சிங்கள் டிராக் ரிலீசாகி புதிய சாதனை படைத்துள்ளது. #Viswasam #ViswasamPongal2019 #Adchithooku

அஜித் - சிவா கூட்டணியில் உருவாகி இருக்கும் படம் ‘விஸ்வாசம்’. இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து இறுதிக்கட்ட பணிகள் மும்முரமாக நடந்து வரும் நிலையில், சமீபத்தில் படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
நேற்று, இப்படத்தின் பர்ஸ்ட் சிங்களான ‘அடிச்சு தூக்கு...’ என்ற பாடலை வெளியிட்டார்கள். இமான் இசையில் வெளியாகி இருக்கும் இந்த பாடல் ரசிகர்களை கவர்ந்து சமூக வலைத்தளத்தில் வைரலானது. தற்போது இந்த பாடல் 5 மில்லியன் பார்வையாளர்களை கவர்ந்து, 5 லட்சம் லைக்குகளை பெற்று யூடியூப் டிரெண்டிங்கில் முதலாவது இடத்தை பெற்று சாதனை படைத்துள்ளது.
சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்திருக்கும் இந்த படத்தில் தூக்கு துரை என்ற கதாபாத்திரத்தில் அஜித் நடித்துள்ளார். இதில் இவருக்கு ஜோடியாக நயன்தாரா நடித்திருக்கிறார். விவேக், தம்பி ராமையா, ரோபோ சங்கர், யோகி பாபு, போஸ் வெங்கட், ரமேஷ் திலக் உள்ளிட்ட பலரும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
2019 பொங்கலுக்கு இப்படத்தை வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். #Viswasam #ViswasamPongal2019 #ViswasamThiruvizha
Related Tags :
விஸ்வாசம் படக்குழுவின் அடுத்த அறிவிப்பு
இணைய தளத்தில் அடிச்சிதூக்கிய விஸ்வாசம் அஜித்
விஸ்வாசம் படத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம்
மீடூ பற்றி அஜித் கருத்து - நடிகை மதுமிதா பேட்டி
விஸ்வாசம் படத்தில் அஜித்துக்கு இரட்டை வேடம் இல்லை - சிவா பேட்டி
இந்திய அளவில் சாதனை படைத்த விஸ்வாசம் மோஷன் போஸ்டர்
அஜித் நடிக்கும் விஸ்வாசம் படத்தின் மோஷன் போஸ்டர் வெளியீடு
குரூப் டான்சர் உடலை கொண்டு வர அஜித் உதவி
விஸ்வாசம் படக்குழுவின் முக்கிய அறிவிப்பு
இதுவரை...









No comments:
Post a Comment