
சிவா இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி வரும் விஸ்வாசம் படத்தில் டி.இமான் இசையில் செந்தில் கணேஷ் - ராஜலட்சுமி இணைந்து ஒரு பாடல் பாடியிருக்கிறார்கள். #Viswasam #AjithKumar
அஜித் - சிவா கூட்டணியில் நான்காவது முறையாக உருவாகும் படம் ‘விஸ்வாசம்’. டி.இமான் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்தப் படத்தின் முதல் பாடல் `அடிச்சு தூக்கு' கடந்த 10-ம் தேதி வெளியானது.
விரைவில் இரண்டாவது பாடலை ரிலீஸ் செய்ய படக்குழு முடிவு செய்துள்ளது. இந்தப் பாடலை, ‘சூப்பர் சிங்கர்’ டைட்டில் வென்ற மக்கள் இசைக் கலைஞர்கள் செந்தில் கணேஷும், அவருடைய மனைவி ராஜலட்சுமியும் இணைந்து பாடியுள்ளனர். செந்தில் ராஜலட்சுமி ஜோடி தமிழ் சினிமாவின் முக்கிய பாடகர்களாக முன்னேறி வருகிறார்கள்.

இவர்கள் பாடிய செவத்த மச்சான் படல் சார்லி சாப்ளின் 2 படத்தில் இடம்பெற்று ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த படத்தில் அஜித், தூக்கு துரை என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மதுரை பின்னணியில் உருவாகி இருக்கும் இந்த படத்தில் அஜித் ஜோடியாக நயன்தாரா நடித்திருக்கிறார். விவேக், தம்பி ராமையா, ரோபோ சங்கர், யோகி பாபு, போஸ் வெங்கட், ரமேஷ் திலக் உள்ளிட்ட பலரும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
படம் 2019 பொங்கலுக்கு ரிலீசாக இருக்கிறது. #Viswasam #AjithKumar #Nayanthara #ViswasamPongal2019 #ViswasamThiruvizha #AdchiThooku
Related Tags :
No comments:
Post a Comment