
மிகவும் குறுகிய காலத்தில் ரசிகர்களால் மக்கள் செல்வன் என்று அழைக்கப்பட்ட விஜய் சேதிபதி இப்போது மாமனிதன் படத்தில் நடித்து வருகிறார்.
இவர் கடந்த பாதைகளை பலரும் அறிந்திருக்க மாட்டார்கள். அவ்வாறு அவர் கடந்து வந்த பாதையில் அனுபவித்த வேதனைகள், முயற்சிகள், கஷ்டங்களை இங்கு காணலாம்.
1978ம் ஆண்டில் சிவில் இஞ்சினியருக்கு மகனாக பிறந்த இவர் தனது தொழில் வாழ்க்கையினை கணக்காளர் பணியிலிருந்து தொடங்கினார்.
சிவில் வேலைகளில் நடக்கும் மோசடிகளை சகித்துக் கொள்ள முடியாமல் இவரது தந்தை தனது அரசாங்க வேலையினை விட்டு வெளியேறினார். பின்பு குடும்பம் வறுமை நிலைக்கு தள்ளப்பட்டது.
ஐந்தாம் வகுப்பு வரை சத்துணவு உணவினை நம்பியே வாழ்க்கையைக் கடத்தினார் விஜய் சேதுபதி. மிகவும் கூச்சம் சுபாவம் கொண்ட இவர் கிழிந்த ஆடைகளை அணிந்து கொண்டே பள்ளிக்குச் சென்றுள்ளார்.
பின்பு சென்னையில் குடியேறிய விஜய்சேதுபதி அதிகமான கடன் சுமைக்கு தள்ளப்பட்டதால் கல்லூரி படிக்கும் போதே வேலை செய்ய ஆரம்பித்தார். துணிக்கடை, பாஸ்ட் புட் நிறுவனம், டெலிபோன் பூத் என கிடைக்கும் இடங்களில் வேலைகளை செய்து வந்துள்ளார்.
என்னதான் தன்னால் முடிந்த வேலையினை செய்து வந்தாலும் கடன் சுமை தீரவே இல்லாத காரணத்தால் இரண்டு வருடம் இந்தியாவில் கணக்காளராக பணியாற்றிவிட்டு துபாய் சென்றுள்ளார்.
வெளிநாட்டிற்கு சென்றால் குடும்ப கஷ்டம் தீர்ந்து விடும் என்று நினைத்த விஜய் சேதுபதி அங்கு சென்று 3 வருடம் கழித்து திருமணத்திற்கு இந்தியா வந்தார். ஆனாலும் கடன்சுமை தீரவில்லை.
சினிமாவில் நடித்தால் மட்டுமே பணம் அதிகமாக சம்பாதிக்க முடியும் என்று எண்ணிய இவரது கண்ணில் கூத்துப் பட்டறையின் விளம்பரம் தென்பட்டுள்ளது.
நடிப்பினைக் கற்றுக்கொள்வதற்கு கூத்துப்பட்டறையில் கணக்காளராக மீண்டும் தனது பணியினை இந்தியாவில் தொடர்ந்துள்ளார். கூத்துப்பட்டறையில் கொடுக்கப்படும் சம்பளம் குறைவாக இருந்ததால் குடும்ப செலவிற்கே திண்டாடிய இவர் பின்பு குறும்படங்களில் நடிக்க தொடங்கினார்.
ஆனால் குறும்படத்தில் பாராட்டை மட்டுமே பெற முடிந்த விஜய் சேதுபதிக்கு பணம் கிடைக்கவில்லை. பின்பு சினிமாவில் சிறு கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு கேட்டு அலைந்துள்ளார்.
நடிக்கத் தெரியவில்லை என்று நிராகரிக்கப்பட்ட இவர் நிறுவனம் நிறுவனமாக ஏறி இறங்கியும் அவமானம் மட்டுமே எஞ்சியது.
தொடந்து முயற்சியினை மேற்கொண்ட விஜய் சேதிபதி 10 ஆண்டுகளாக அதிகமான தோல்விகளை மட்டுமே சந்தித்தார்.
குடும்ப பிரச்சினையும் உச்சக்கட்டமடைந்தும் தனது முயற்சியினை மட்டும் விடாமல் தொடர்ந்து முயற்சித்துள்ளார். தனது தவறுகளைத் திருத்திக் கொண்டு நடிப்புப் பயிற்சியில் அதிக கவனம் செலுத்தியுள்ளார்.
பின்பு சிறு சிறு வேடங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. தொடந்து முயற்சியை மட்டும் கைவிடவில்லை. அதன் பலனாக தென்மேற்கு பருவ காற்று படத்தில் கதாநாயகனாக வாய்ப்பு கிடைத்தது.
அதன் பின்பு பீட்சா, சூது கவ்வும் போன்ற தொடர் வெற்றிகளைப் பெற்றார். மிகக்குறுகிய காலத்தில் ரசிகர்கள் மனம் கவர்ந்த நாயகனாக மாறிய விஜய் சேதுபதியை 2017ம் ஆண்டில் வெளியான விக்ரம் வேதா படம் தமிழ் சினிமாவில் நட்சத்திர நாயகனாக மாற்றியது.
தான் நினைத்ததைவிட பலமடங்கு வெற்றியைப் பெற்று புகழின் உச்சத்திற்கு சென்றுள்ளார். நீங்கள் உலகிலேயே மிக நல்லவராக இருந்தாலும், மிகச் சிறந்த கருத்துக்களைக் கூறினாலும் வெற்றி அடைந்தால் மட்டுமே இங்கே மரியாதை கிடைக்கும் என்பது உறுதி.
No comments:
Post a Comment