டெல்லி: எய்ம்ஸ் மருத்துவமனை அடிக்கல் நாட்டு விழாவிற்காக ஜனவரி மாதம் மோடி மதுரை வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நேற்று கூடிய மத்திய அமைச்சரவை குழு மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க ஒப்புதல் அளித்தது. மதுரை திருப்பரங்குன்றத்தை அடுத்த தோப்பூர் கோ.புதுப்பட்டி பகுதியில் 198.27 ஏக்கர் பரப்பளவில் ரூ.1,500 கோடி செலவில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்பட உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அறிவித்து இருந்தது.

இதில் மருத்துவக் கல்லூரி, ஆராய்ச்சிக் கூடம், செவிலியர் கல்லூரி மற்றும் பொது மருத்துவம் உள்ளிட்ட பிரிவுகள் இடம்பெறவுள்ளது. இதற்காக கோ.புதுப்பட்டியில் வருவாய்த்துறையினர் வசம் உள்ள பகுதியில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ள பகுதி என வரையறுக்கப்பட்டு, 198.27 ஏக்கர் நிலமும் கையகப்படுத்தப்பட்டது. மின் வாரியத்துறையினர் அந்த இடத்தில் உள்ள மின்கம்பங்கள் மற்றும் டிரான்ஸ்பார்ம்களை அகற்றும் பணியில் ஈடுப்பட்டு வருகின்றனர். இதனை அடுத்து எய்ம்ஸ் மருத்துவமனை கட்ட மத்திய அமைச்சரவையின் ஒப்புதல் கிடைத்துள்ளதால், 45 மாதங்களில் எய்ம்ஸ் கட்டுமானப்பணிகள் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் மதுரையில் எய்ம்ஸ் மற்றும் புதுநத்தம் ரோடு பறக்கும் பாலம் திட்ட அடிக்கல், அரசு சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை திறப்பு ஆகியவற்றிற்காக பிரதமர் மோடி 2019 ஜனவரி இறுதியில் அல்லது பிப்ரவரி முதல் வாரத்தில் மதுரை வர இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் வேகம் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment