அழகாக பாடும் கழுதை..! இன்டர்நெட்டில் வைரலாகும் வீடியோ..! - Todays News

             Todays News

Political News, World News, Jobs, Education, District News, Current Affairs, Health Tips, Beauty Tips, Science, Technology, Samayal Tips.

Amazon

Dec 7, 2018

அழகாக பாடும் கழுதை..! இன்டர்நெட்டில் வைரலாகும் வீடியோ..!

அழகாக பாடும் கழுதை..! இன்டர்நெட்டில் வைரலாகும் வீடியோ..!

female donkey breaks sweet song become internet sensation

 பொதுவாக ஒருவருக்கு குரல் சரியில்லை என்றால் அவரை கழுதை குரல் என கிண்டல் செய்வோம். ஆனால் தற்போது வைரலாகி வரும் வீடியோ ஒன்றில் கழுதை ஒன்று அழகாக பாடியுள்ளது. 

 மஹாராஷ்டிரா

மஹாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த ரெஸ்க்யூ சாரிட்டபிள் டிரஸ்ட் என்ற தன்னார்வல தொண்டு நிறுவனம் ஒன்று சமீபத்தில் ஒரு வீடியோ ஒன்றை சமூகவலைதளங்களில் வெளியிட்டது. அதில் கழுதை ஒன்று அழகான ரிதத்தில் பாடியுள்ளது. இந்த வீடியோ பேஸ்புக் டுவிட்டர் போன்ற சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த கழுதை குறித்து நம் செய்தி நிறுவனத்திற்கு ரெஸ்க்யூ டிரஸ்ட் நிறுவனம் அளித்த தகவலில் கூறுவதாவது : "புனேவில் உள்ள ஒரு வீதியில் இந்த கழுதை கர்ப்பத்துடன் திரிந்துள்ளது. அப்பொழுது ஒரு நாள் இதற்கு குட்டி பிறந்த போது அது இறந்து பிறந்துள்ளது. அப்பொழுது முதல் இந்த கழுதை அருகில் யாரையும் விடாமல் ஆக்ரோஷமாக இருந்துள்ளது. இது குறித்து ரெஸ்க்யூ டிரஸ்டிற்கு தகவல் வந்ததும் நாங்கள் அந்த இடத்திற்கு சென்று இந்த கழுதையை மீட்டு அதற்கு சிகிச்சை அளித்தோம். அன்று முதல் அந்த கழுதையை நாங்களே பராமரித்து
வந்தோம்.

முதலில் மிக ஆக்ரோஷமாக காணப்பட்ட இந்த கழுதை மெதுமெதுவாக தனது ஆக்ரோஷத்தை குறைத்து கொண்டு நாங்கள் பராமரித்து வரும் மற்ற கழுதைகளுடன் சேர்ந்து பழக துவங்கியது.
கொஞ்ச நாளில் ஆக்ரோஷமாக இருந்த கழுதை மற்ற கழுதைகளுடன் மிக பாசமாக மாறியது. தற்போது சந்தோஷத்தில் பாட்டு பாடுவது போல சத்தம் எழுப்ப துவங்கியது.  

இந்த சத்தம் மிக அழகாக மனிதன் பாட்டுபாடுவது போலவே இருந்ததால் அதை வீடியோவாக எடுத்து சமூகவலைதளங்களில் வெளியிட்டோம். " என கூறினார்கள்.

தற்போது இந்த கழுதை சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த வீடியோவை பலர் பல்வேறு தளங்களில் பகிர்ந்து வருகின்றனர். 


No comments:

Amazon

அதிகம் படிக்கபட்டவை: Featured Posts

SBI Clerk Recruitment 2019: Dates

SBI Clerk 2019 Exam Highlights Exam Name                                      SBI Clerk 2019 Exam Conducting Body                 ...