
பாங்க்கோக்:
புற்றநோயை அடியோடு அழிக்க விஞ்ஞானிகள் மருந்து கண்டுப்பிடிக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் விஞ்ஞானிகளை வியக்க வைக்கும் அளவு ஆயுர் வேத மருந்து கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.
எள்ளு சாப்பிட்டா புற்றநோய் வராமல் இருக்குமாம். அது மட்டுமில்லாமல், புற்றுநோய் வந்தவருக்கும் இது அருமருந்தாக இருக்கும் என்று இப்போதைய ஆராய்ச்சியில் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.
அன்று முதல் இன்று வரை உணவில் எள்ளு சேர்த்து சாப்பிடும் பழக்கத்தை கடைபிடித்து வருகின்றோம். இப்படி பலவித உணவு பொருட்களில் எள்ளின் பங்கு இன்றியமையாத ஒன்றாக இருந்து வருகின்றது. எள்ளை உணவில் சேர்த்து கொள்வதால் ஏராளமான நன்மைகள் கிடைக்கும்.
அதில் மிக முக்கியமானது புற்றுநோயை எதிர்த்து நிற்பதே. நோய்கள் இல்லாமல் நம்மை வாழ வைக்க ஒரு பிடி எள்ளே போதுமாம்.
எதிர்ப்பு சக்தி அதிகம் கொண்ட உணவுகளில் எள்ளும் ஒன்று. இதில் உள்ள எண்ணற்ற ஆன்டி ஆக்சிடன்ட்ஸ், ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள், கால்சியம், பாஸ்பரஸ், மெக்னீசியம், பொட்டாசியம், வைட்டமின் எ போன்றவை தான் எள்ளின் அத்தனை மகத்துவத்திற்கும் காரணம். அத்துடன் இதை சரியான அளவில் எடுத்து கொண்டால் பலன் முழுமையாக கிடைக்குமாம்.
தாய்லாந்து நாட்டு ஆராய்ச்சியில் வெளியான திடுக்கிடும் தகவல்
தாய்லாந்தின் Chiang Mai University, புற்றுநோய் மற்றும் எள் பற்றிய ஆராய்ச்சியில் பல திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டுள்ளது.
அதில் கருப்பு எள் ,புற்றநோய் செல்களை உருவாக விடாமல் தடுக்கும் எனவும், மூளை செல்களை மறு உற்பத்தி செய்யும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. புற்றநோய் வரவிடாமல் நம்மை காப்பதற்கு மிக முக்கிய காரணம் "Sesamin" தான்.
Sesamin என்பது எள்ளில் உள்ள முக்கிய மூல பொருள். மற்ற தாதுக்களை காட்டிலும் இந்த Sesamin வேதி மூல பொருள் எதிர்ப்பு சக்தியை தூண்டி நேரடியாக புற்றுநோய் செல்களை தடை செய்கிறது.
இவை ஆண்கள் பெண்கள் என இரு விதமாக அதன் பயனை பிரித்து தருகின்றது.
பெண்களுக்கு எப்படி..?
பெண்கள் தினமும் எள் சாப்பிடுவதால் அவர்களுக்கு பெரிதாக வருகின்ற மார்பக புற்றுநோய் தடுக்கப்படுகிறது. அத்துடன் ரத்த நாளங்களில் புற்றுநோய் செல்கள் வளர விடாமல் பார்த்து கொள்கிறது என தாய்லாந்து ஆராய்ச்சியில் கூறப்படுகிறது.
மார்பக புற்றுநோயிற்கு மட்டுமின்றி பெருங்குடல் புற்றநோய், கல்லீரல் புற்றநோய் போன்றவற்றையும் இது தடுக்கிறது. குடலில் சேர்ந்துள்ள கெட்ட கொலஸ்ட்ராலை வெளியேற்றி சுத்தமாக வைக்கிறது. எனவே, புற்றநோய் அபாயம் உங்களுக்கு கிடையாது.
கருப்பா..? வெள்ளையா..?
எந்த எள்ளு அதிக ஆற்றல்களை கொண்டது என்கிற கேள்விக்கு பதில், கருப்பு எள் தான். எள்ளை பற்றிய பல ஆய்வுகளில் கருப்பு எள் தான் மகத்துவம் பெற்றது என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
வெள்ளை எள்ளை விட கருப்பு எள்ளில் தான் ஊட்டச்சத்துக்களும், தாதுக்களும் அதிகம் இருக்கிறதாம்.
எவ்வளவு சாப்பிடலாம்..?
தினமும் அரை ஸ்பூன் எள்ளு சாப்பிடுவது சிறந்தது. இதை உணவுடன் சேர்த்து கொண்டு சாப்பிட்டால் நல்லது.
குறிப்பாக அரிசி அல்லது ஓட்ஸ் உடன் சேர்த்து சாப்பிட்டால் பலன் முழுமையாக கிடைக்கும். உடலில் ஏதேனும் நோய்கள் உள்ளவர்கள் மருத்துவரின் ஆலோசனை பெற்று சாப்பிட்டால் மிகவும் நல்லது.
No comments:
Post a Comment