
இயக்குனர் சிவா இயக்கத்தில் அஜீத் நடிப்பில் பொங்கலுக்கு வெளிவர இருக்கும் திரைப்படம் விஸ்வாசம்.
இத்திரைப்படத்துக்கு முதன்முறையாக D.இமான் இசையமைத்துள்ளார். இந்த படத்தில், விவேக், தம்பிராமையா, விவேக், யோகி பாபு , ரோபோ சங்கர், இமான் அண்ணாச்சி, ரமேஷ் திலக் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.
அஜித்துடன் 4 ஆவது முறையாக நாயன்தாரா இணைந்து நடித்துள்ளார்.
இதில் டங்கா டங்கா பாடலை சூப்பர் சிங்கர் புகழ் செந்தில் கணேஷ், ராஜலட்சுமி ஆகியோர் பாடினர். இந்த பாடலை விஸ்வாசம் படத்திற்கு தான் என தெரியாமலேயே பாடியதாக செந்தில் கணேஷ், ராஜலட்சுமி தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக அண்மையில் செந்தில் கணேஷ், ராஜலட்சுமி அளித்த பேட்டியில், டங்கா டங்கா பாடல், விஸ்வாசம் படத்திற்குதான் என பாடும் போது எங்களுக்கு தெரியாது. பாடல் பாடிய பிறகு சில நாட்கள் கழித்து தான் இமான் சார் எங்களிடம் தெரிவித்தார். அஜித் சார் நடித்த விஸ்வாசம் படத்திற்கு தான் இந்த பாடல் என கூறிஇமான் சார் எங்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார் என செந்தில் கணேஷ், ராஜலட்சுமி தெரிவித்தனர்.
No comments:
Post a Comment