வறுமையிலும் செம்மை: உணவு வழங்கும் வாலிபர்....
Source< http://www.dinamalar.com/news_detail.asp?id=2158979 >
மயிலாடுதுறை: வறுமையான சூழலிலும், ஆதரவற்றோருக்கு உணவு மற்றும் உடைகளை,
வாலிபர் வழங்கி வருகிறார். நாகை மாவட்டம், மயிலாடுதுறை அருகே, பெரம்பூர்
கிராமத்தைச் சேர்ந்தவர் பாரதிமோகன், 35.
ஏழை விவசாய குடும்பத்தை சேர்ந் தவர். 10 ஆண்டுகள் வெளிநாட்டில் வேலை செய்த இவர், மூன்று ஆண்டுக்கு முன் ஊர் திரும்பினார்.பெற்றோர், மனைவி, மகனுடன், குடிசையில் வசித்து வருகிறார். சிறு வயதில், வறுமையில் தான் பட்ட கஷ்டத்தை உணர்ந்து,வெளிநாட்டில் வேலை செய்து, சேமித்த பணத்தை கொண்டு, ஆதரவற்ற முதியவர்களுக்கு, தினமும் உணவு மற்றும் உடை வழங்கி வருகிறார்.

தன் குடும்பத்தினரின் ஆதரவுடன் வீட்டிலேயே உணவு சமைத்து, மயிலாடுதுறை,
வைத்தீஸ்வரன்கோவில், சீர்காழி, பூம்புகார் பகுதிகளில், வறுமையில்
பட்டினியால் வாடும் ஆதரவற்ற முதியவர்கள், மனநலம் பாதிக்கப்பட்டவர்களை
தேடிப் பிடித்து, உணவு வழங்கி வருகிறார். தன்னைப் போல மற்றவர்களும், ஆதரவற்ற
ஏழைகளுக்கு உதவ முன்வர வேண்டும் என்ற நோக்கில், தன் பணிகளை, சமூக
வலைதளங்களில் பகிர்ந்துள்ளார்.
இதன் பயனாக, கையிருப்பு முழுவதும்
கரைந்த நிலையில், இனி என்ன செய்வது என கலங்கி நின்ற பாரதிமோகனுக்கு,
முகநுால் நண்பர்கள் கைகொடுத்து, நிதி உதவி வழங்கி வருகின்றனர்.அதனுடன்,
தன்னால் இயன்ற வேலைகள் செய்து, அதில் கிடைக்கும் வருமானத்தின் ஒரு
பகுதியையும் சேர்த்து, ஆதரவற்ற முதியோருக்கு தொய்வின்றி உதவிகள் செய்து
வருகிறார்.
No comments:
Post a Comment