கூண்டுப் பறவைகளை விடுதலை செய்யாதீர்கள் - Todays News

             Todays News

Political News, World News, Jobs, Education, District News, Current Affairs, Health Tips, Beauty Tips, Science, Technology, Samayal Tips.

Amazon

Dec 10, 2018

கூண்டுப் பறவைகளை விடுதலை செய்யாதீர்கள்

கூண்டுப் பறவைகளை விடுதலை செய்யாதீர்கள்.....

கூண்டுப் பறவைகளை சுதந்திரமாக பறக்க விடுவது, அவற்றை கொல்வதற்கு சமம்.

கூண்டுப் பறவைகளை விடுதலை செய்யாதீர்கள்

தொலைக்காட்சியில் படம் ஒன்று ஓடிக்கொண்டிருந்தது. அந்தத் திரைப்படத்தில் வரும் கதாநாயகி சுதந்திரத்தை மிகவும் விரும்புகிறவர். ஒரு கடைவீதியில் வளர்ப்புப் பறவைகள் விற்கும் கடைக்கு சென்று கூண்டு களோடு நிறைய பறவைகளை விலைக்கு வாங்கி, அந்தப் பறவைகள் எல்லாவற்றையும் பறக்க விட்டுவிடுவார். ஒளிந்துகொண்டு பார்க்கும் கதாநாயகனுக்கு நாயகி மேல் காதல் வருவதற்கு இது போதாதா?

பறவைகள் சுதந்திரமாக பறக்க வேண்டியவை என்ற நல்லெண்ணம்தான் அந்தக் கதாநாயகியின் செயலுக்கு அடிப்படை. ஆனால், நல்லெண்ணம் பல நேரங்களில் சரியான எண்ணங்களாக இருப்பதில்லை. பெரும்பாலான கூண்டுப் பறவைகள் காலம்காலமாக கூண்டுப் பறவைகளாகவே வளர்க்கப்படுபவை. சொல்லப்போனால் அவற்றால் அதிக உயரத்திலோ, அதிக தொலைவுக்கோ பறக்க முடியாது பருந்து போன்ற இரைகொல்லி பறவைகள் வந்தால், அவற்றுக்குத் தற்காத்துக்கொள்ளத் தெரியாது. தாமாக இரை தேடத் தெரியாது. கூடு அமைத்துக்கொள்ளத் தெரியாது. அப்படி இருக்கும்போது அந்த பறவைகளை சுதந்திரமாக பறக்க விடுவது, அவற்றை கொல்வதற்கு சமம்.

ஆதிகாலத்து நாயைப் போல சுதந்திரமாக இருக்கட்டும் என்று நம் வீட்டு நாயை கொண்டு போய் காட்டில் விட்டால் என்னவாகும்? வெகு விரைவில் சிறுத்தைக்கோ, புலிக்கோ இரையாகி விடுமல்லவா? அதைப் போலத்தான் கூண்டுப்பறவைகளை பறக்க விடுவதும். ஆரம்ப காலத்தில் சுதந்திரமாக திரிந்து கொண்டிருந்த பறவைகளை பிடித்துத்தான், கலப்பினப் பெருக்கம் செய்து கூண்டுப் பறவைகளாக்கி வைத்திருக்கிறார்கள். காக்கட்டீல் கிளிகள், காதல் பறவைகள், கானரிகள், பிஞ்சஸ் போன்றவை மிகவும் பிரபலமாக இருக்கும் கூண்டுப் பறவைகளாகும்.

வளர்ப்புப் பறவைகளாக இல்லாமல் இயற்கையாக தற்போது பறந்து திரியும் கிளி, மைனா, புறா போன்ற பறவைகளையும் பிடித்து வந்து கூண்டுப் பறவைகளாக ஆக்குகிறார்கள். வளர்ப்புப் பறவைகளாக்குவதற்காக இயற்கைப் பறவைகளைப் பிடிப்பதால், பஞ்சவர்ணக் கிளி போன்ற பல்வேறு பறவை இனங்கள் அழிவின் விளிம்பில் இருக்கின்றன. கூண்டுப் பறவைகளை விடுதலை செய்வதைவிட புத்திசாலித்தனம், கூண்டுப் பறவைகளை வாங்காமல் இருப்பதுதான். அப்படிச் செய்தால்தான், இந்த நோக்கில் பறவைகளைப் பிடிப்பவர்கள் குறைவார்கள். காலப்போக்கில் கூண்டுப் பறவைகள் என்ற தனி இனமும் இல்லாமல்போகும். எனவே, அடுத்த முறை கடைவீதியில் யாராவது கூண்டுப் பறவைகளுக்கு விடுதலை வாங்கித்தந்தால் அவரை அவசரப்பட்டுக் காதலிக்க ஆரம்பித்துவிடாதீர்கள்.


No comments:

Amazon

அதிகம் படிக்கபட்டவை: Featured Posts

SBI Clerk Recruitment 2019: Dates

SBI Clerk 2019 Exam Highlights Exam Name                                      SBI Clerk 2019 Exam Conducting Body                 ...