சாண்டாவாக சர்ப்ரைஸ் கொடுத்த ஒபாமா!- மருத்துவமனையில் துள்ளிக்குதித்த குழந்தைகள் - Todays News

             Todays News

Political News, World News, Jobs, Education, District News, Current Affairs, Health Tips, Beauty Tips, Science, Technology, Samayal Tips.

Amazon

Dec 20, 2018

சாண்டாவாக சர்ப்ரைஸ் கொடுத்த ஒபாமா!- மருத்துவமனையில் துள்ளிக்குதித்த குழந்தைகள்


கிறிஸ்துமஸ் சீசன் களைக்கட்டத் தொடங்கிவிட்டது. குறிப்பாக அமெரிக்கா அலங்காரங்களால் ஜொலிக்கிறது. வீதிகள்தோறும் பரிசுப் பொருள்களுடன் சாண்டா கிளாஸ்கள் வலம் வருகின்றனர். நேற்று இரவு வாஷிங்டனில் அனைவரின் மனம் கவர்ந்த ஒரு சாண்டா வந்திருந்தார். அவரின் வரவு அங்கிருந்தவர்களுக்குப் பெருமகிழ்ச்சி கொடுத்தது. ஆம், நேற்று இரவு வாஷிங்டன் குழந்தைகள் நல மருத்துவமனைக்கு அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா திடீர் விசிட் அடித்தார்.

தலையில் சாண்டா தொப்பி, பரிசுப் பொருள்கள் அடங்கிய மூட்டை என கிறிஸ்துமஸ் தாத்தாவாக உருமாறி அங்கிருந்தவர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார். மருத்துவமனையின் ஒவ்வோர் அறையிலும் நுழைந்து சிகிச்சையில் இருக்கும் குழந்தைகளுக்கு கிறிஸ்துமஸ் பரிசுகளை வழங்கினார். குழந்தைகள் உற்சாகத்தில் துள்ளிக் குதித்தனர். சில குழந்தைகள் சந்தோஷத்தில் அழவும் செய்தன. ஒவ்வொரு குழந்தையையும் கட்டியணைத்து முத்தமிட்டு தன் வாழ்த்தை தெரிவித்தார். முதலில் வெயிட்டிங் அறையில் இருந்த நர்ஸ், மருத்துவர் உள்ளிட்டவர்களை சந்திந்துப் பேசினார். மருத்துவமனை ஊழியர்கள் அனைவரையும் ஒன்றுக்கூட்டி, `விடுமுறை நாளிலும் தன் வீட்டில் இல்லாமல் மருத்துவமனையில் குழந்தைகளை அக்கறையோடு பார்த்துக் கொள்ளும் ஒவ்வொருவருக்கும் என் வாழ்த்துகள். உங்கள் அனைவரையும் மகிழ்விக்கவே நான் இங்கு வந்தேன்' என்று உரக்கப் பேசினார்.


ஒபாமா சர்ப்ரைஸ் கொடுத்ததைப் பற்றி மருத்துவமனை நிர்வாகம் ட்விட்டரில் பகிர்ந்திருந்தது. அந்த ட்வீட்டை ரீட்வீட் செய்த ஒபாமா `உங்கள் அனைவருக்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்துகள். என்னை சாண்டாவாக ஏற்றுக்கொண்டதற்கு நன்றி' என்று குறிப்பிட்டார். கூடவே சின்னதாக நடனம் வேறு ஆடி அசத்தினார்.

ஒபாமா முன்பெல்லாம் இதுபோன்று அடிக்கடி குழந்தைகள் இருக்கும் இடங்களுக்கு சர்ப்ரைஸ் விசிட் அடிப்பது வழக்கம். `ஒபாமா தன் பழைய சேட்டைகளை தொடங்கிவிட்டார்' என அமெரிக்க மக்கள் மகிழ்ச்சியுடன் பதிவிட்டு வருகின்றனர்.


Embedded video
Thank you @BarackObama for making our patients’ day so much brighter. Your surprise warmed our hallways and put smiles on everyone’s faces! Our patients loved your company…and your gifts! https://www.instagram.com/p/BrlZliwBD8e/  ❤️
17.6K people are talking about this

No comments:

Amazon

அதிகம் படிக்கபட்டவை: Featured Posts

SBI Clerk Recruitment 2019: Dates

SBI Clerk 2019 Exam Highlights Exam Name                                      SBI Clerk 2019 Exam Conducting Body                 ...