Science - Todays News

             Todays News

Political News, World News, Jobs, Education, District News, Current Affairs, Health Tips, Beauty Tips, Science, Technology, Samayal Tips.

Amazon

Dec 8, 2018

Science

செவ்வாய் கிரகத்தில் கேட்ட சத்தம் யாருடையது?


செவ்வாய் கிரகத்தில் முதல் முதலாக ஒலியை கேட்க முடிந்ததிருக்கிறது எனவும் இன்சைட் விண்கலம் அதனைப் பதிவு செய்து அனுப்பியுள்ளது எனவும் நாசா தெரிவித்துள்ளது.
nasa shares the sounds of mars recorded by insight
செவ்வாய் கிரகத்தின் நிலப்பரப்பில் ஆழமாக ஆய்வு செய்ய நாசாவால் அனுப்பப்பட்ட விண்கலம் இன்சைட். நவம்பர் 26ஆம் தேதி வெற்றிகரமாக செவ்வாய் கிரகத்தை அடைந்த விண்கலம் அங்கு தனது பணியைத் தொடங்கியது. அது சில புகைப்படங்களையும் பூமிக்கு அனுப்பியதாக நாசா வெளியிட்டது.

இந்நிலையில் செவ்வாய் கிரகத்தில் ஒரு சத்தத்தைக் கேட்க முடிந்ததாக நாசா தெரிவித்துள்ளது. முதல் முதலாக செவ்வாய் கிரகத்தின் ஒலியைக் கேட்டிருக்கிறோம். இன்சைட் விண்கலம் அந்த சத்தத்தைப் பதிவு செய்து அனுப்பியுள்ளது என்றும் தெரிவித்திருக்கிறது. 

அந்தச் சத்தம் உரக்கக் கேட்கக்கூடியதாக இல்லை என்றும் காற்றின் அதிர்வலைகளே ஒலியாக பதிவாகியுள்ளது என்றும் குறிப்பிட்டிருக்கிறது. செவ்வாய் கிரகத்தில் வடமேற்கில் இருந்து தென்கிழக்கை நோக்கி, மணிக்கு 10 முதல் 25 மைல் வேகத்தில் இந்த அதிர்வலை பதிவாகியுள்ளது. 

“இது போன்ற சின்ன சின்ன சத்தங்கள்கூட கோள்களைப் ஆராய்ச்சியில் செய்வதற்கு மிகவும் உதவியாக இருக்கும். இன்சைட் அனுப்பியது போன்ற ஒலியை எதிர்பார்க்கவே இல்லை.” என நாசா விஞ்ஞானி புரூஷ் பெனர்ட் வியந்துள்ளார். 




இன்சைட் அனுப்பிய சத்தத்தை நாசா அனைவரும் கேட்கும் விதமாக யூ டியூப் தளத்தில் வெளியிட்டுள்ளது. மிகவும் லேசாக ஒலிக்கும் அந்தச் சத்தத்தை ஹெட்போனிலோ ஸ்பீக்கர்கள் மூலமோதான் கேட்க முடியும் எனவும் கூறியிருக்கிறது.

No comments:

Amazon

அதிகம் படிக்கபட்டவை: Featured Posts

SBI Clerk Recruitment 2019: Dates

SBI Clerk 2019 Exam Highlights Exam Name                                      SBI Clerk 2019 Exam Conducting Body                 ...