நிலவை ஆய்வு செய்ய ரோபோவை அனுப்பிய சீனா.! இஸ்ரோவுக்கு சவால்.!
இந்தியாவை போலவே சீனாவும் தற்போது விண்வெளியில் தனி கவனம் செலுத்த துவங்கியுள்ளது.
இஸ்ரோவின் சந்திரன்-1 தண்ணீர் இருப்பதற்கான காரணங்களையும் கண்டறிந்து கூறியது. மேலும், சந்திராயன் 2 திட்டம் தயார் நிலையில் இருக்கின்றது.

மேலும், சுகன்யான் திட்டம் மூலம் மனிதனை விண்ணுக்கு அனுப்பும் திட்டம் 2022ம் ஆண்டுக்கு செயல்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இஸ்ரோவுக்கு சவால் விடும் வகையில், நிலவின் மறுப்பகத்தை ஆய்வு செய்ய சீனா ரோபோவை விண்ணுக்கு அனுப்பியுள்ளது.
நிலவு, செவ்வாய்: நிலவு, செவ்வாய்க்கு மனிதனை அனுப்பும் முன் தாவரம், பிற உயிரினங்கள் எப்படி அங்கு நிழவும் சூழ்நிலையை தாக்குபிடித்து வாழ்கின்றன எப்பதை கண்டறியது சீனாவின் சாங் இ திட்டம். இதையொட்டி சாங் இ 4 மிஷன் திட்டத்தை சீனா செயல்படுத்தி உள்ளது.

சாங்-இ 4: பூமியை நோக்கி இதுவரை காணப்படாத நிலவின் மற்றொரு பகுதியாக கருத்தப்படும் வோன் கர்மான் பகுதியில் சாங்-இ 4 செயற்கைகோள் தரையிறங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

செயற்கைகோள்: நிலவின் மண், பாறையை பூமிக் கொண்டு வர மேலதிக ஆராய்ச்சிகளை செய் சீனா திட்டதிட்டுள்ளது. ஜனவரியில் தரையிரங்காது. ஆனால் செயற்கைகோள் நிலவின் வேறொரு மூலையில் கரடு முரடான பகுதியில் தரையிறங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மண் மாதிரிகள் பூமிக்கு வரும்: தற்போது சீனாவினால் ஏவப்பட்டுள்ள செயற்கைக்கோள் இதுவரை ஆராய்ச்சிகளே மேற்கொள்ளப்படாத நிலவின் தென் துருவப் பகுதியின் புவியியல் அமைப்பு குறித்த தகவல்களை சேமிப்பதோடு அங்கிருந்து பாறை துண்டுகள், மண் மாதிரிகளை பூமிக்கு கொண்டு வரும்.

சுற்றி வரும் நிலவு: Tidal locking அல்லது ஓதப் பூட்டல் என்ற விளைவின் காரணமாக நம்மால் நிலவின் ஒரு பகுதியை மட்டுமே பார்க்க முடிகிறது. ஏனெனில், நிலவை சுற்றி வருவதற்கு எடுத்துக் கொள்ளும் அதே காலத்தை தன்னைத்தானே சுற்றி வருவதற்கும் நிலவு எடுத்துக் கொள்கிறது.

இருண்ட பக்கம்: பொதுவாக நிலவின் 'இருண்ட பக்கம்' என்றழைக்கப்படும் இந்த இடத்திலும் சூரிய வெளிச்சம் காணப்பட்டாலும், பூமியிலிருந்து இந்த இடத்தை பார்க்க முடியாது என்பதால்தான் இதை அவ்வாறு அழைக்கின்றனர்.

ரேடியோ அலைகள்: பூமியின் தொலைதூரத்தில் ரேடியோ அலைகளை அடிப்படையாக கொண்ட தொலைநோக்கிகளை நிலவின் தென் துருவத்தில் அமைப்பதற்கான பூர்வாங்க பணிகளையும் இந்த செயற்கைக்கோள் மேற்கொள்ளும்.

பட்டுப்பூச்சி முட்டைகள்: அதுமட்டுமின்றி, நிலவில் உயிரியல் பரிசோதனைகளை மேற்கொள்வதற்காக ஒரு பெட்டிக்குள் உருளைக்கிழங்கு, அராபிடாப்சிஸ் தாவரத்தின் விதைகள் மற்றும் பட்டுப்பூச்சி முட்டைகள் மூன்று கிலோ கொண்ட கொள்கலனில் கொண்டு செல்லப்பட்டுள்ளன.

சூழ்நிலை மண்டலம்: நிலவை அடையும் பட்டுப்பூச்சி முட்டைகள் முதலில் பட்டுப்பூச்சிகளை உற்பத்தி செய்யும், பின்னர் அந்த பட்டுப்பூச்சிகள் நிலவில் கரியமில வாயுவை உற்பத்தி செய்யும். இதற்கிடையில், உருளைக்கிழங்கு மற்றும் அராபிடாப்சிஸ் செடிகள் வளர்ந்து ஒளிச்சேர்க்கை மூலம் ஆக்சிஜனை உற்பத்தி செய்யும். இவை அனைத்தும் ஒன்று சேர்ந்து நிலவில் ஒரு சிறிய சூழ்மண்டலத்தை (simple ecosystem) உருவாக்கும் என்கிறார் ஆய்வாளர் யுவான்சுன்.

28 சீனா பல்கலைக்கழகம்: லூனார் மினி பயோஸ்பியர்' என்று பெயரிடப்பட்டுள்ள இந்த உபகரணத்தை 28 சீன பல்கலைக்கழகங்கள் இணைந்து உருவாக்கியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
Read more at: https://tamil.gizbot.com/scitech/chinas-change-4-launches-on-mission-the-moons-far/articlecontent-pf145903-020133.html
Read more at: https://tamil.gizbot.com/scitech/chinas-change-4-launches-on-mission-the-moons-far/articlecontent-pf145903-020133.html
No comments:
Post a Comment