Top 10 Amazing Viral Videos 2018 World Technology with LIQUID METAL COPPER. Wood Products, Processes
இந்த பொங்கலுக்கு விஜய் டிவியில் செக்கச் சிவந்த வானம், வட சென்னை மற்றும்...
சென்னை: இந்த பொங்கல் பண்டிகைக்கு விஜய் டிவியில் 4 படங்கள் ஒளிபரப்பப்பட உள்ளன. பொங்கல் பண்டிகைக்கு தியேட்டருக்கு சென்று படம் பார்த்தாலும் தொலைக்காட்சி சேனல்களில் வெளியாகும் படங்களை பார்ப்பதிலும் ரசிகர்கள் ஆவல் காட்டுவார்கள். இந்த பொங்கலுக்கு விஜய் தொலைக்காட்சியில் என்னென்ன புதுப்படங்கள் ஒளிபரப்பப்படுகிறது என்று தெரிய வந்துள்ளது. அரவிந்த்சாமி, விஜய் சேதுபதி, சிம்பு, அருண் விஜய் நடிப்பில் வெளியாகி ஹிட்டான செக்கச் சிவந்த வானம், விக்ரமின் சாமி ஸ்கொயர், தனுஷின் வட சென்னை, கதிர் நடித்த பரியேறும் பெருமாள் ஆகிய நான்கு படங்கள் விஜய் தொலைக்காட்சியில் பொங்கல் ஸ்பெஷலாக ஒளிபரப்பப்படுகின்றது. எப்பொழுது பண்டிகை வந்தாலும் தொலைக்காட்சி சேனல்கள் போட்டி போட்டுக் கொண்டு புதுப்படங்களை ஒளிபரப்புகின்றன. ஆனால் அதை பார்க்க பல நேரம் மின்சாரம் இருப்பது இல்லை. தொலைக்காட்சி சேனல்களில் புதுப்படம் போட்டால் மின்வாரியத்திற்கு பிடிக்காது போன்று. சரியாக படம் துவங்கும் நேரத்தில் மின்வெட்டு ஏற்படும். இந்த பொங்கலுக்கு மின்வெட்டு எதுவும் இல்லாமல் முழு படத்தையும் பார்ப்போம் என்று நம்புவோமாக.
No comments:
Post a Comment