தமிழில் அறிமுகமாகும் அமலா-லிசி
வாரிசுகள்
கமல் ஜோடியாக ‘விக்ரம்’ படத்தில் நடித்தவர் லிசி. இவர் இயக்குனர் பிரியதர்ஷனை மணந்து பின்னர் விவாகரத்து பெற்று பிரிந்தார். இவர்களது மகள் கல்யாணி தெலுங்கில் ஹலோ படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். இப்படம் தமிழிலும் அதே பெயரில் வெளியாகிறது. ஹீரோவாக நடிகர் நாகார்ஜூனா, நடிகை அமலா தம்பதிகளின் மகன் அகில் நடித்துள்ளார். படத்தை தயாரிக்கும் பொறுப்பை நாகார்ஜூனா ஏற்றிருக்கிறார். மாதவன் நடித்த ‘யாவரும் நலம்’, சூர்யா நடித்த ‘24’ படங்களை இயக்கிய விக்ரம் கே.குமார் இப்படத்தை இயக்குகிறார். ரம்யாகிருஷ்ணன், ஜெகபாதி பாபு, சத்யகிருஷ்ணா, அஜெய், அனீஸ்குருவில்லா, வெண்ணிலா கிஷோர் ஆகியோரும் நடிக்கிறார்கள். பி.எஸ்.வினோத் ஒளிப்பதிவு. அனூப் ரூபன் இசை. ஏ.என்.பாலாஜி வெளியிடுகிறார்.
இப்படம்பற்றி ஹீரோ அகில் கூறும்போது,’சுட்டிக்குழந்தை படத்தில் கைக்குழந்தையாக நான் தமிழில் நடித்திருந்தேன். என் அம்மா அமலாவும் தமிழில் அறிமுகமாகித்தான் பிரபலம் அடைந்தார். தற்போது ஹலோ படம் மூலம் தமிழில் ஹீரோவாக நான் அறிமுகமாகிறேன். தமிழ் ரசிகர்கள் வரவேற்பு தருவார்கள் என்று நம்புகிறேன். இது ரொமான்டிக், ஆக்ஷன், திரில்லர் கலந்த கமர்ஷியல் படம். டிசம்பரில் ரிலீஸ்’ என்றார்.
No comments:
Post a Comment