சிக்கன், ஃபிஷ் கறி, 20 வகை
உணவுடன் ஷ்ரத்தாவுக்கு விருந்து
பிரபாஸ் ஜோடியாக சாஹோ படத்தில் நடிக்கிறார் ஷ்ரத்தா. கடந்த மாதம் இவர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வீட்டிலேயே தங்கி சிகிச்சை பெற்றார். 2 வார ஓய்வுக்கு பிறகு அவர் குணம் அடைந்தார். பின்னர் படப்பிடிப்புக்கு வந்த ஷ்ரத்தாவை படக்குழுவினர் வரவேற்றனர். டப்பிடிப்பின்போது நடிகர், நடிகைகளுக்கு பட தயாரிப்பு நிறுவனமே உணவு ஏற்பாடு செய்வது வழக்கம். ஆனால் ரஜினி, கமல், விஜயகாந்த், சரத்குமார், பிரபு, சத்யராஜ் போன்ற ஒரு சில ஹீரோக்களுக்கு அவரவர்கள் வீட்டிலிருந்து வகைவகையான உணவு வந்துவிடும். அதை சக நடிகர்களுடன் பகிர்ந்து உண்பார்கள். அந்த பாணியில் நடிகர் பிரபாஸுக்கும் வீட்டிலிருந்து படப்பிடிப்பு தளத்துக்கு உணவு சமைத்து அனுப்பிவிடுவார்கள். கடந்த சில மாதங்களுக்கு முன் நடிகை ஷ்ரத்தாவுக்கு வீட்டில் சமைத்த சிறப்பு உணவு வகைகளை அனுப்பினார் பிரபாஸ்.
அதை ஷ்ரத்தா தனது இன்ஸ்டாகிராமில் படம் பிடித்து வெளியிட்டு பிரபாஸுக்கு நன்றி சொல்லியிருந்தார். அதேபோல் சில தினங்களுக்கு முன் சிக்கன், மட்டன், ஃபிஷ் கறி, எறா புட்டு, முட்டை வறுவல் என 20 வகையான உணவு வகைகளை சாப்பிட தயாராக வைத்து அதன் அருகில் நாவில் எச்சில் ஊற அமர்ந்திருக்கும் புகைப்படம் எடுத்து இன்ஸ்டாகிராமில் வெளியிட்டிருக்கிறார் ஷ்ரத்தா. ஆனால் இம்முறை இந்த தடபுடல் விருந்து படைத்தது யார் என்பதை அவர் தெரிவிக்காவிட்டாலும் இது பிரபாஸின் ஏற்பாட்டில் பரிமாறப்பட்ட விருந்துதான் என ரசிகர்கள் கமென்ட் பகிர்ந்திருக்கின்றனர்.
No comments:
Post a Comment