மோடியின் அடுத்த அதிர்ச்சி 'வாகன மதிப்பிழப்பு'... இனி ஒரு பய வண்டி ஓட்ட முடியாது...
இந்தியர்கள் மத்தியில் சொந்த வாகனத்தை வாங்கி பயன்படுத்தும் பழக்கம் அதிகமாக இருந்து வருகிறது. இன்று வாகனம் இல்லாத வீடுகளே இந்தியாவில் மிக குறைவுதான். குறைந்த பட்சம் ஒரு வாகனமாவது ஒரு வீட்டில் இருக்கிறது. சிலர் வீட்டில் இருக்கும் ஒவ்வொருக்கும் ஒரு வாகனம் என்று பயன்படுத்தி வருகின்றனர்.

இதற்கு முக்கிய காரணம் பொது போக்குவரத்தின் பற்றாகுறையும், அதற்கான பயண செலவுமே ஆகும். பெரு நகரங்களில் செயல்படும் பெரும்பாலான பேருந்துகள் அதிக கூட்டத்துடன் செல்கிறது. இதனால் மக்கள் அதில் பயணிக்க விரும்பவில்லை.

போதாக்குறைக்கு இந்தியாவில் மக்கள் தொகை வேறு அதிகரித்து வருகிறது. இதனால் ஏற்படும் நெருக்கடியை சமாளிக்க வேண்டும். தற்போது ஆட்டோமொபைல் மார்கெட்டும் இந்தியாவில் அதிகமாக உள்ளது. விரைவில் இந்திய மக்கள் தொகையை தாண்டி இந்தியாவில் உள்ள வாகனங்களின் எண்ணிக்கை சென்றாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
நிலைமை இப்படி இருக்கையில் இந்தியாவில் எதிர்காலத்தில் ஆட்டோமொபைல் சந்தைக்கு ஏற்றதாக இருக்குமா என்ற சந்தேகம் ஆட்டோமொபைல் நிறுவனங்களுக்கு ஏற்பட்டு விட்டது. எதிர்காலத்தில் இந்தியா போன்று அதிக மனித வளம் கொண்ட நாட்டில் ஆட்டோமொபைலுக்கு பெரிய மார்கெட் இல்லை என்றால் அவர்களது வருமானத்திற்கு பெரிய அளவில் இழப்பு ஏற்படும்.
இதனால் எதிர்கால இந்தியாவிலும் தொடர்ந்து ஆட்டோமொபைலுக்கான மார்கெட்டை நிலை நாட்ட தற்போது கார்ப்பரேட் நிறுவனங்கள் அரசுடன் சேர்ந்து சில திட்டங்களை கொண்டு வர முயற்சிப்பதாக கூறப்படுகிறது.
Read more at: https://tamil.drivespark.com/four-wheelers/2018/india-planing-for-life-end-policy-for-vehicles/articlecontent-pf127177-016320.html?utm_medium=Desktop&utm_source=FB-TA&utm_campaign=relatedArticles
Read more at: https://tamil.drivespark.com/four-wheelers/2018/india-planing-for-life-end-policy-for-vehicles/articlecontent-pf127177-016320.html?utm_medium=Desktop&utm_source=FB-TA&utm_campaign=relatedArticles
No comments:
Post a Comment