மூட்டை, மூட்டைகளாக கிழிந்த ரூபாய் நோட்டு.. சென்னையில் பரபரப்பு....
சென்னையில் மூட்டை, மூட்டைகளாக கிழிந்த ரூபாய் நோட்டு
சென்னை: மாதவரம் ரெட்டேரி அருகே கிழிந்த பழைய 1000 ரூபாய் 500 ரூபாய் நோட்டுகள் அடங்கிய 35 மூட்டைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
மாதவரம் ரெட்டேரி அருகே ஆட்டு மந்தை உள்ளது. இங்கு காலை 10 மணி அளவில் கேட்பாரற்று பழைய 500 மற்றும் 100 ரூபாய் நோட்டுக்கள் கிழிந்த நிலையில் மூட்டைகளில் கிடந்தன. அதாவது மறுசுழற்சிக்காக கிழிக்கப்பட்ட நோட்டுகள் என கூறப்படுகிறது. மர்ம நபர்கள் மாதவரம் புழல் கொரட்டுர் போன்ற ஏரி கரைகளில் 35 மூட்டை பழைய கிழிந்த நோட்டுகளை திட்டமிட்டு வீசியுள்ளனர்.


இதனை கண்ட பொதுமக்கள் காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தனர். உடனே அங்கு விரைந்து சென்ற மாதவரம் காவல்துறையினர் கேட்பாரற்று கிடந்த மூட்டைகளை பிரித்துப் பார்த்தனர். அதில் கிழிந்த நிலையில் பழைய 1000 ரூபாய் 500 ரூபாய் நோட்டுகள் இருப்பது தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து கிழிந்த பண மூட்டைகளை கைப்பற்றிய மாதவரம் போலீசார், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.கருப்பு பணத்தை ஒழிப்பதற்காக, பணமதிப்பிழப்பு செய்யப்பட்ட பின்னர், பல்வேறு இடங்களில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூபாய் நோட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர். இந்தநிலையில், பழைய 1000 ரூபாய் 500 ரூபாய் நோட்டுகள் கிழிக்கப்பட்ட நிலையில், கைப்பற்றப்பட்டுள்ளது மாதவரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Read more at: https://tamil.oneindia.com/news/chennai/35-bags-torn-old-1000-rupees-500-rupees-335106.html
Read more at: https://tamil.oneindia.com/news/chennai/35-bags-torn-old-1000-rupees-500-rupees-335106.html
No comments:
Post a Comment