டிச., 4 முதல் மூன்று நாட்களுக்கு மழை....
சென்னை: தமிழகத்தில், டிச., 4 முதல் மூன்று நாட்களுக்கு மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை வானிலை ஆய்வு இயக்குனர் பாலச்சந்திரன் கூறியதாவது: தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மழை பொழிவு இல்லை. தென் கிழக்கு வங்க கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை நிலவுகிறது. இது மேற்கு நோக்கி நகரும் பட்சத்தில் டிச., 4, 5,6ம் தேதிகளில் மழை பெய்ய துவங்கும். டிச., 4ம் தேதி கடலோர மாவட்டங்களில் அனேக இடங்களில், உள்மாவட்டகளில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யும்.
டிச., 5, 6ம் தேதி அனேக இடங்களில் மழை பெய்யும். டிச., 5 வடதமிழகத்தில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உண்டு. சென்னையை பொறுத்தவரை டிச., 2, 3ம் தேதிகளில் லேசான மழையும், 4,5,6ம் தேதி சில முறை மிதமான மழையும் பெய்ய கூடும். இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment