தமிழ்ராக்கர்ஸ் அட்மின் கைது? - Todays News

             Todays News

Political News, World News, Jobs, Education, District News, Current Affairs, Health Tips, Beauty Tips, Science, Technology, Samayal Tips.

Amazon

Dec 2, 2018

தமிழ்ராக்கர்ஸ் அட்மின் கைது?

Tamilrockers: தமிழ்ராக்கர்ஸ் அட்மின் கைது?




tamilrockers admin member arrested in coimbatore news is viral

தமிழ்ராக்கர்ஸ் இணையதளத்தின் அட்மின் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


கோவை : திரைத் துறையினருக்கு மிகப்பெரிய தலைவலியாக இருக்கும் தமிழ்ராக்கர்ஸ்இணையதளத்தின் அட்மின் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

பிரமாண்டமாக தயாரிக்கப்பட்ட 2.O படம் முதல் நாளே இரண்டு ஷோ முடிவதற்குள் தமிழ் ராக்கர்ஸில் வெளியானது படக்குழுவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

2.O படத்தை திருட்டுத்தனமாக இணையதளங்களில் பதிவிடுவதை தடுக்கும் வகையில், 3000 இணையதளங்களை முடக்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. 



அதையும் மீறி 2.O படம் நேற்று படம் வெளியாகி இரண்டு காட்சிகள் முடிவதற்குள் இணையதளத்தில் திருட்டுத் தனமாக வெளியிடப்பட்டதால் திரை உலகினர் அதிர்ச்சியில் உறைந்தனர். 


2.O மட்டுமில்லாமல் தமிழ், தெலுங்கு, என எந்த மொழி படமாக இருந்தாலும் வெளியான சில மணி நேரத்தில் தமிழ்ராக்கர்ஸில் வெளியாவதால் சினிமா துறையை சேர்ந்தவர்கள் பெரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். தமிழ்ராக்கர்ஸ் யார், எப்படி அந்த இணையதளத்தை கட்டுப்படுத்துவது என தெரியாமல் விழி பிதுங்கி நின்கின்றனர். 

2.O படத்தை வெளியிட்ட தமிழ்ராக்கர்ஸ் : அதிர்ச்சியில் படக்குழு 

தமிழ்ராக்கர்ஸ் அட்மின் கைது: 
இந்நிலையில் தமிழ்ராக்கர்ஸ் இணையதளத்தின் அட்மின் கோவையில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிறுப்பில் வைத்து கைது செய்யப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இவரின் பெயர் மற்றும் விவரங்களை உடனடியாக வெளியிடவில்லை. 


தமிழ்ராக்கர்ஸ் இணையதளத்தின் அட்மின் கைது செய்யப்பட்டுள்ளதாக வந்துள்ள தகவலால் திரையுலகினர் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர்.

இப்பினும் போலீஸாரின் விசாரணையின் முடிவில் அவர் தான் அட்மினா என்பது தெரியவரும். 



No comments:

Amazon

அதிகம் படிக்கபட்டவை: Featured Posts

SBI Clerk Recruitment 2019: Dates

SBI Clerk 2019 Exam Highlights Exam Name                                      SBI Clerk 2019 Exam Conducting Body                 ...