90,000 பதவிகளுக்கு 2.5 கோடி பேர் போட்டி... இதுதான் இன்றைய வேலைவாய்ப்பு நிலைமை! - Todays News

             Todays News

Political News, World News, Jobs, Education, District News, Current Affairs, Health Tips, Beauty Tips, Science, Technology, Samayal Tips.

Amazon

Dec 20, 2018

90,000 பதவிகளுக்கு 2.5 கோடி பேர் போட்டி... இதுதான் இன்றைய வேலைவாய்ப்பு நிலைமை!

ந்தியாவின் பொருளாதார வளர்ச்சியின் பலன்கள் நாட்டின் அனைத்து துறைகள் மற்றும் குடிமக்களுக்குச் சென்று சேரவில்லை என்றும், வேலை வாய்ப்பை உருவாக்க புதிய யுக்தி தேவை என்றும் ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் ஆங்கில செய்திச் சேனல் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில், ``இந்தியா, போதுமான வேலைவாய்ப்புகளை உருவாக்கவில்லை. வேலைவாய்ப்பின்மை நாட்டின் பெரிய பிரச்னையாக உருவெடுத்துள்ளது. இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7 சதவிகிதத்தைத் தொட்டபோதிலும், போதுமான வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படாமல் இருப்பது கவலை அளிக்கும் அம்சமாக உள்ளது.

ரயில்வே துறையில் 90,000 பணியிடங்களுக்கு 2.5 கோடி பேர் விண்ணப்பிக்கும் அளவுக்கு வேலை இல்லா திண்டாட்டம் உள்ளது. இத்தனைக்கும் இந்தப் பணியிடங்கள் அதிக சம்பளத்தைக் கொண்டதுகூட இல்லை. குறைந்த ஊதியம் கொண்ட வேலைதான். ஆனால், அதற்கே இந்த அளவுக்குப் போட்டி காணப்படுவது, வேலை வாய்ப்பு எந்த அளவுக்குத் தேவையாக உள்ளது என்பதைக் காட்டுகிறது. மேலும், நாட்டின் பொருளாதார வளர்ச்சியின் பலன்கள் அனைத்துத் தரப்புக்கும் பகிர்ந்தளிக்கப்படாமல் இருப்பதையே இது காட்டுகிறது.

அத்துடன், நமது தற்போதைய அணுகுமுறையில் எது உண்மையிலேயே வேலைவாய்ப்பை உருவாக்கவிடாமல் தடுக்கிறது என்பதைக் கண்டறிந்து, அவற்றைக் களைவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு, வேலைவாய்ப்புகளை அதிகரிக்க வேண்டும். வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில் பழைய முறைகளைப் பின்பற்றாமல், புதிய முறையைப் பின்பற்ற வேண்டும். வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தும் துறைகளுக்குப் புதிய சலுகைகளை அளிக்க வேண்டும்.

சர்வதேச நிறுவனங்கள் இந்திய பணியாளர்களை ஏன் பெரிய அளவில் வேலைக்கு அமர்த்துவதில்லை. கல்வி மற்றும் திறமையில் அவர்களிடம் எது பற்றாக்குறையாக உள்ளது என்பதையெல்லாம் கண்டறிந்து நமது குறைகளை நாம் களைய வேண்டும்.


மேலும் இந்திய பணியாளர்கள் விகிதத்தில், ஆண்களுடன் ஒப்பிடுகையில் பெண் பணியாளர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாகவே உள்ளது. நாட்டின் பொருளாதாரத்தில் பெண்களின் பங்களிப்பு இல்லாதது மிகவும் கவலை அளிக்கக்கூடிய விஷயமாகும். பெண்களுக்கு நாம் போதுமான வாய்ப்புகளை உருவாக்கித் தருவதில்லை.


நாட்டில் போதுமான வேலைவாய்ப்பை நாம் உருவாக்காவிட்டால், சமூக அமைதியின்மையை நாம் காண நேரிடும். தற்போது நாட்டின் பொருளாதாரம் எதிர்கொள்ளும் மூன்று முக்கிய பிரச்னைகளே விவசாயிகளின் துன்பம், நஷ்டத்தில் இயங்கும் மின்துறை நிறுவனங்கள் மற்றும் வங்கி அமைப்பின் நெருக்கடி ஆகியவைதான்" எனக் கூறியுள்ளார்.

No comments:

Amazon

அதிகம் படிக்கபட்டவை: Featured Posts

SBI Clerk Recruitment 2019: Dates

SBI Clerk 2019 Exam Highlights Exam Name                                      SBI Clerk 2019 Exam Conducting Body                 ...