பரியேறும் பெருமாள் வெற்றியை தொடர்ந்தார் நடிகர் கதிர்! - Todays News

             Todays News

Political News, World News, Jobs, Education, District News, Current Affairs, Health Tips, Beauty Tips, Science, Technology, Samayal Tips.

Amazon

Dec 20, 2018

பரியேறும் பெருமாள் வெற்றியை தொடர்ந்தார் நடிகர் கதிர்!


பரியேறும் பெருமாள் வெற்றி நாயகன் கதிர் நடிக்கும் அடுத்த படம் குறித்த விவரம் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவிற்கு கிடைத்த ஆகச்சிறந்த நடிகர்களில் ஒருவர் நடிகர் கதிர். 

இவரின் இந்த அடையாளம் தமிழ் சினிமாவையும் தாண்டி உலகம் அறியச்செய்தது பரியேறு பெருமாளின் வெற்றி தான். 

மதயானை கூட்டம் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமாகி இன்று பரியேறும் பெருமாளாக உயர்ந்து நிற்கிறார் கதிர் . தனக்கு பொருத்தமான ஸ்கிரிப்ட்டுகளை தேர்ந்துதெடுத்து, அதில் கவனம் செலுத்தி வெற்றி பயணம் மேற்கொள்ளும் திறன் கொண்ட கதிர், கதாநாயகன் பாத்திரம் அல்லாது கதைகளில் தோன்றும் நாயகனாகவும் நடித்து வருகிறார். 

மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளிவந்த பரியேறும் பெருமாள் படம் சமூகத்தில் நடக்கும் சாதி கொடுமைகளை மிகவும் யதார்த்தமாக சொல்லியது. இந்த படத்தின் வெற்றியால் வளர்ந்து வரும் டாப் 5 ஹீரோக்கள் பட்டியலில் கதிர் இணைந்தார். 

இந்நிலையில் தற்போது இவரது அடுத்த படத்தை வொய் நாட் ஸ்டுடியோஸ் தயாரிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது. இப்படத்தின் இயக்குனர், நடிகர்கள் குறித்த அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வரும் வரை காத்திருப்போம்.

No comments:

Amazon

அதிகம் படிக்கபட்டவை: Featured Posts

SBI Clerk Recruitment 2019: Dates

SBI Clerk 2019 Exam Highlights Exam Name                                      SBI Clerk 2019 Exam Conducting Body                 ...