உங்களுக்கு இந்த கலர் பிடிக்குமா!! அப்பொழுது நீங்கள் இப்படி தான் இருப்பீர்கள்!! - Todays News

             Todays News

Political News, World News, Jobs, Education, District News, Current Affairs, Health Tips, Beauty Tips, Science, Technology, Samayal Tips.

Amazon

Dec 19, 2018

உங்களுக்கு இந்த கலர் பிடிக்குமா!! அப்பொழுது நீங்கள் இப்படி தான் இருப்பீர்கள்!!




ஒருவருக்கு பிடித்த கலரைக் கொண்டு அவருடைய குணத்தை கண்டுபிடித்து விடலாம் என்கின்றனர் உளவியலாளர். அதேபோல் அவர்கள் வைத்திருக்கும் கார்களின் நிறங்கள் கூட அவர்களின் மனதையும், குணத்தையும் பிரதிபலிக்கும் என்கின்றனர் ஆய்வாளர்கள். காதலில் நீங்கள் எப்படி என்பதைக் கூட உங்களுக்குப் பிடித்த கலரை வைத்து கண்டுபிடித்து விடலாமாம். ஆய்வாளர்கள் சொன்னது சரிதான என்பதை படித்து பார்த்து தெரிந்து கொள்ளுங்களேன்.



சந்தோஷம் தரும் மஞ்சள்
மஞ்சள் நிறப் பிரியர்களின் காதல் ஆசைகள் அளவுக்கு மீறியதாக இருக்கும். அத்தனை ஆசைகளையும் இவர்களது காதல் இணையால் நிறைவேற்ற முடியாது. அதனால் இந்த நிற மனிதர்களின் காதலுக்கு ஜோடி கிடைப்பது கஷ்டம். காதலுக்காக உயிரைக்கூட கொடுப்பேன் என்பார்கள். ஆனால் பர்சில் இருக்கும் பணத்தைக்கூட செலவழிக்க யோசிப் பார்கள். இவர்கள் அறிவாளியாகவும், கொள்கையில் பிடிப்பு கொண்டவர்களாகவும் இருப்பதால் கல்யாண வாழ்க்கை என்று வந்துவிட்டால், தனது ஜோடியை எல்லா விதத்திலும் சந்தோஷப்படுத்துவார்கள்.
நினைத்ததை முடிக்கும் சிவப்பு
சிவப்பு வர்ணத்தை விரும்புபவர்கள் காதல் உணர்வில் செம ஸ்பீடா இருப்பார்களாம். அளவிட முடியாத ஆசைகளைக் கொண்டிருப்பார்கள். தன்னுடைய கற்பனையில் கண்டதை எல்லாம் நிறைவேற்ற வேண்டும் என்று துடிப்பார்கள். இவர் விரும்பும் ஜோடிக்கும் பிடித்த நிறம் சிவப்பு என்றால், இவர்கள் வாழ்க்கையை திகட்ட திகட்ட அனுபவிப்பார்கள். ஆனால் காதல் விஷயத்தில் இவர்களின் பிடிவாத குணம், சில நேரங்களில் மிகப்பெரிய சிக்கலை உருவாக்கிவிடும். இவர்கள் ஆசைப்பட்டதை அடையாமல் விட மாட்டார்கள்.
காதல் மன்னன் பிங்க்
பிங்க் நிறத்தை விரும்புபவர்கள் கணக்கற்ற காதல் கனவுகள் கொண்டவர்களாக இருப்பார்கள். தினமும் இரண்டு மூன்று பேருக்காவது அவர்கள் ரூட் விடுவார்களாம். காதல் விஷயங்களை படிப்பதிலும், அதை செயல்படுத்திப்பார்த்து உண்மையா, பொய்யா என்று கண்டறிவதிலும் மெனக் கெடுவார்கள். தங்கள் காதல் இணையை ரொம்பவும் புகழ்ந்து, கனவு காணவைத்து தான் நினைப்பதை சாதிக்க முயற்சிப்பார்கள். பிங்க் நிறத்தை விரும்பும் பெண்கள் தனித்துவம் பெற்றவர்களாக இருப்பார்கள். ஆண்களை எளிதில் நம்பி ஏமாந்துவிட மாட்டார்கள்.
காதலில் திளைக்கும் பச்சை:
பச்சையை விரும்பும் பெண்களின் மனதில் என்ன இருக்கிறது என்பதை அறிவது கடினம். இவர்கள் அதிகம் பேசமாட்டார்கள். காதல் உணர்வுகளையும் எளிதாக வெளிப்படுத்தமாட்டார்கள். ஆனால் இந்த நிறத்தை விரும்பும் பெண்களிடம் காதல் உணர்வுகள் அதிகம் இருக்கும். காதலரே கணவர் ஆனாலும் காலம் முழுக்க அவரோடு காதல் கொள்ள துடிப்பார்கள். முத்த மழையில் குளிப்பாட்டி விடுவார்கள்.
புதுமையை விரும்பும் நீலநிறம்
நீல நிறத்தை விரும்பும் பெண்கள் நாலைந்து ஆண்களை ஆராய்ந்து, இறுதியில் அதில் ஒருவரை தேர்வு செய்து காதலிப்பார்கள். `தாம்பத்ய' விஷயத்திலும் இவர்கள் புதுமை விரும்பிகளாக இருப்பார்கள். இந்த நிறத்தை விரும்புகிறவர்களிடம் காதல் உணர்வு அதிக மிருக்கும். நீல நிறத்திற்குரிய ஆண்களிடமும் இதே இயல்புகள் இருக்கும்.
சுயநலவாதியான பர்பிள்
பர்ப்பிள் வர்ணத்தை விரும்புபவர்கள் காதல் என்றாலும், கல்யாணம் என்றாலும் தனது எதிர்காலத்திற்கு அதன் மூலம் எவ்வளவு கிடைக்கும் என்று கணக்கு போடும் சுயநலவாதிகள். கல்யாணத்திற்கு பெண் பார்த்தாலும் அவளிடம் தனி யாகப் பேசி தன் எதிர்பார்ப்புகளை எல்லாம் `டன்` கணக்கில் கொட்டுவார்கள். அதைக் கேட்டு அதிர்ந்துபோகும் பெண், `அவரோடு தன்னால் வாழ்க்கை நடத்த முடியாது` என்று கூறிவிடுவாள். அதனால் இந்த நிறத்தை விரும்புகிறவர்களுக்கு காதல் மட்டுமல்ல, கல்யாணமும் தள்ளிப்போய்க்கொண்டே இருக்கும்.

Image result for orange colour pic with girl

தத்துவம் பேசும் ஆரஞ்ச்
ஆரஞ்ச் வர்ண பார்டிகளுக்கு கடவுள் நம்பிக்கை அதிகம். காதல் இவர்களுக்கு சுட்டுப்போட்டாலும் வராது. யாராவது காதல் தூதுவிட்டாலும் தத்துவம் பேசி விரட்டிவிடுவார்கள். அதற்கு போய் யாராவது நேரத்தை செலவிடுவார்களா என்று தத்துவம் பேசுவார்கள். இந்த நிறத்தை விரும்பும் ஆண்களை, பெண்கள் சாமியார் என்பார்கள்.
மன அழுத்தம் தரும் கறுப்பு
கறுப்பு நிறத்தை விரும்புபவர்கள் யாரிடமும் மனம்விட்டுப் பேச மாட்டார்கள்.இறுக்கமான மனிதர்களாக இருப்பதால் இவர்கள் காதல் பார்வை பார்த்தாலும், எதிர்பாலினம் நம்பிக்கை கொள்ளாமல் நழுவிச்சென்றுவிடும். காதல் இவர்களுக்கு பெரும்பாலும் கைகூடாது.மன அழுத்தம் இவர்களிடம் அதிகம் உண்டு. அதை தீர்க்க சரியான மருந்து தாம்பத்ய உறவு கொள்வதுதான் என்று நம்புவதால் விரைவில் திருமணம் முடிக்க ஆசைப்படுவார்கள்.
காதலை வெறுக்கும் வெள்ளை
வெள்ளை நிறத்தை விரும்புபவர்கள் `காதலாவது கத்தரிக்காயாவது..' என்று எப்போதும் காதலுக்கு எதிராகவே பேசுவார்கள். காதலிப்பவர்களை தூற்றவும் செய்வார்கள். இதனை விரும்பும் ஆண்களைப் பார்த்தாலே பெண்கள் நாசூக்காக நழுவிப்போய் விடுவார்கள். ஆனால் குடும்ப வாழ்க்கைக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள்.

No comments:

Amazon

அதிகம் படிக்கபட்டவை: Featured Posts

SBI Clerk Recruitment 2019: Dates

SBI Clerk 2019 Exam Highlights Exam Name                                      SBI Clerk 2019 Exam Conducting Body                 ...