பப்ஜி கேம் ஏற்படுத்தும் ஆபத்து : ஒரு பார்வை! - Todays News

             Todays News

Political News, World News, Jobs, Education, District News, Current Affairs, Health Tips, Beauty Tips, Science, Technology, Samayal Tips.

Amazon

Dec 13, 2018

பப்ஜி கேம் ஏற்படுத்தும் ஆபத்து : ஒரு பார்வை!


native impacts of pubg online game

இளைஞர்கள் மத்தியில் பிரபலமாக இருக்கும் பப்ஜி கேம், நமக்கு ஏற்படுத்தும் ஆபத்துகளை பற்றி அலசுவதே இந்த செய்தி தொகுப்பு.

இளைஞர்கள் மத்தியில்பிரபலமாக இருக்கும் பப்ஜி கேம், நமக்கு ஏற்படுத்தும் ஆபத்துகளை பற்றி அலசுவதே இந்த செய்தி தொகுப்பு. 


`Player’s Unknown Battle Ground' என்பதன் சுருக்கமே ‘PUBG’. ஐரிஸ் நாட்டின் ’பிராடன் கிரீனி’ என்பவர் உருவாக்கிய இந்த கேமை, உலகம் முழுவதும் 10 கோடி பேர்தினமும் விளையாடி வருகின்றனர். முதலில் வெளிநாடுகளில் மட்டுமே விளையாடப்பட்டு வந்த இந்த கேம், கடந்த மார்ச் மாதம்தான் இந்தியாவில் அறிமுகமானது. அறிமுகமாகிய சில மாதங்களில் அதிமானோர் இந்த கேமுக்கு அடிமையாகி உள்ளனர்.




பப்ஜி கேம் விளக்கம் 


சிறிய தீவுகளை உள்ளடக்கிய பெரிய தீவில் 100 பேரை ஆயுதங்களுடன்களத்தில் இறக்கி விடுவர். தங்களை காத்துக்கொள்ள மற்றவர்களை அவர்கள் கொல்ல வேண்டும். இறுதியில் யார் உயிரோடு இருக்கிறார்களோ அவர்களே வெற்றியாளர்கள். 




அனைவரையும் இந்த கேம் ஈர்ப்பதற்கு முக்கிய காரணமே, இந்த கேமில் பயன்படுத்தப்பட்ட உயர்தர கிராபிக்ஸ் தொழில்நுட்பம். இந்த கேம் விளையாடுபர்களுக்கு தங்களை காப்பாற்றிக்கொள்ள புதிய ஐடியாக்கள் வழங்கப்படுகிறது. அதிகபடியான ஆயுதங்கள் இந்த விளையாட்டில் பயன்படுத்தப்பட்டுள்ளது. 

பப்ஜியால் ஏற்படும் விளைவுகள் 

இது ஒரு சாதரண கேம்தானே.. நம்மை என்ன செய்யும் என்று நீங்கள் நினைக்கலாம். இதுபோலத்தான் புளூவேலும் ஒரு சாதரண கேமாக தொடங்கியது என்பதை நாம் மறந்துவிட முடியாது. புளூவேல் அளவுக்குஇது பாதகமான கேமாக தெரியாவிட்டாலும், இந்த கேமால்உளவியல் பாதிப்பு ஏற்படுகிறது.





ற்றவர்களிடமிருந்து தனிமைபடுத்தி, இயற்கையான உலகத்திலிருந்து நம்மை பிரித்து செயற்கையான உலகில் வாழவைக்கிறது. எப்போதும் உயிரை காப்பாற்றிக்கொள்ள வேண்டும் என்ற பதட்டநிலையை ஏற்படுத்துகிறது. இரவு முழுக்க பப்ஜி விளையாடுவதால்அதிக சோர்வு ஏற்பட்டு சகஜமான வேலைகளை செய்யாமல் தவிர்க்கும் பழக்கம் ஏற்படும். 




எப்போதும் ஒருவித பதட்டத்தில் நம்மை இருக்க வைக்கும் அளவுக்கு உளவியல் பாதிப்பை இந்த கேம் ஏற்படுத்துகிறது.இந்தகேம் விளையாடுவதால், நமது தனித்தன்மையான சிந்தனை மழுங்கடிக்கப்படும். மற்றவர்கள் மேல் உள்ள வன்மம் அதிகரிக்கும்.இந்த கேமை மருத்துவர்கள் டிஜிட்டல் போதை பொருள்’ என்று அழைக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 


Tamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்
Latest-News News Samayam Tamil ஃபேஸ்புக் போல அனைத்து நடப்புகளையும் பெறலாம் 
Web Title: native impacts of pubg online game


Don’t Miss: The Top Trending Stories

No comments:

Amazon

அதிகம் படிக்கபட்டவை: Featured Posts

SBI Clerk Recruitment 2019: Dates

SBI Clerk 2019 Exam Highlights Exam Name                                      SBI Clerk 2019 Exam Conducting Body                 ...