
திண்டிவனம்:
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி தாலுகா தெள்ளார் அருகே கொரக்கோட்டையில் உள்ள மலையை செதுக்கி பிரமாண்ட பெருமாள் சிலை உருவாக்கப்பட்டது. இந்த சிலையை பெங்களூரில் உள்ள ஈஜிபுரா பகுதியில் உள்ள தனியார் தொண்டு நிறுவனத்தில் நிறுவப்படுகின்றது. இந்த சிலை கொரக்கோட்டையிலிருந்து ராட்சத லாரி மூலம் பெங்களூருக்கு கொண்டு சென்றபோது திண்டிவனம் அருகே வெள்ளிமேடுபேட்டையில் கரியன் மகன் குபேர் கடை, வீடு அதற்கு எதிர் திசையில் உள்ள சீனுவாசன் மகன் முருகேசன் கடையும் சேதமானது.
இதை கண்டித்து பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் சம்பந்தப்பட்ட நிர்வாகம் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்கியது. தொடர்ந்து புதுச்சேரி திருவண்ணாமலை தேசிய நெடுஞ்சாலையில் கொண்டு செல்ல 50 நாட்கள் அனுமதி முடிந்ததால் தீவனூரில் நிறுத்தி வைக்கப்பட்டது. திங்கட்கிழமை அனுமதி வாங்கிய பிறகு சிலை கொண்டு செல்ல முடிவு செய்யப்பட்டது. இந்நிலையில் நேற்று அனுமதி கிடைக்காததால் லாரி அங்கேயே நிறுத்தப்பட்டுள்ளது. இந்த பிரமாண்ட பெருமாள் சிலையை பார்க்கவும், வழிபடவும் அகூர், கூட்டேரிப்பட்டு, தீவனூர், நாட்டார்மங்கலம், செஞ்சி மற்றும் திண்டிவனம் பகுதி மக்கள் குவிந்து வருகின்றனர். இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.
No comments:
Post a Comment