இனி மழை பெய்த உடனே 'லீவ்' கிடையாது....
சென்னை :
மழையின் பள்ளிகளுக்கு விடுமுறை விடுவது தொடர்பாக மாவட்ட கலெக்டர்களுக்கு, தமிழக பள்ளி கல்வித்துறை செயலாளர் பிரதீப் யாதவ் புதிய கட்டுப்பாடுகளை விதித்து உத்தரவிட்டுள்ளார்.
இதன்படி, இனி பள்ளிகளுக்கு மழை பெய்த உடனேயே விடுமுறை விடக்கூடாது. மழையால் வெள்ளம் ஏற்படும் சூழல் ஏற்பட்டால் மட்டுமே விடுமுறை விட வேண்டும். மழையால் பாதிக்கப்படும் பகுதிக்கு மட்டுமே விடுமுறை அறிவிக்க வேண்டும். மழையால் போக்குவரத்து பாதிக்கப்படுவது போன்ற சூழல் ஏற்பட்டால் மட்டுமே விடுமுறை அறிவிக்க வேண்டும். சிறு தூறல் விழுந்தால் உடனே விடுமுறை அறிவிக்கக் கூடாது.
மழை காரணமாக கல்வி மாவட்ட அளவில் அல்லது ஊராட்சி அளவில் மட்டுமே விடுமுறை விடலாம். மழையை பொறுத்து பள்ளி துவங்குவதற்கு 3 மணி நேரத்திற்கு முன்பு விடுமுறை அறிவிக்கலாம். திருவிழா போன்ற உள்ளூர் விடுமுறை அறிவித்தால் அதற்கு ஈடு செய்யம் வகையில் சனிக்கிழமை வகுப்புக்கள் நடத்த வேண்டும். விடுமுறை காரணமாக பாடத்திட்டம் ஏதும் பாதிக்காத வகையில் பார்த்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு பள்ளி கல்வித்துறை செயலாளர் பிறப்பித்துள்ள உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment