Science and Technology - Todays News

             Todays News

Political News, World News, Jobs, Education, District News, Current Affairs, Health Tips, Beauty Tips, Science, Technology, Samayal Tips.

Amazon

Dec 9, 2018

Science and Technology

முழுதும் வைரம் பதிக்கப்பட்ட விமானம்! வைரல் போட்டோவின் கதை...

முழுதும் வைரம் பதிக்கப்பட்ட விமானம்! வைரல் போட்டோவின் கதை...

ஆச்சர்யத்தில் ஆழ்த்தும் விமானம் ஒன்றின் புகைப்படம் இணையதளத்தில் உள்ள பலரை ஈர்த்தது மட்டுமின்றி குழப்பமடையவும் செய்துள்ளது. சமூகவலைதளங்களில் வேகமாக வைரலாகி வரும் அந்த புகைப்படத்தில், முழுவதும் வைரம் பதிக்கப்பட்ட எமிரேட்ஸ் விமானம் ஒன்று, பயணத்திற்கு தயாராக இருப்பது போல ஓடுதளத்தில் நிற்பது காண்பிக்கப்பட்டுள்ளது. இதில் முக்கியமானது என்னவெனில், எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ்-ன் அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் இந்த புகைப்படம் பகிரப்பட்டுள்ளதால், நெட்டிசன்களின் கவனத்தை பெரிதும் ஈர்த்துள்ளது. இந்த அலங்கரிக்கப்பட்டுள்ள விமானம் வெறும் புகைப்படம் தான், உண்மையல்ல.

" எமிரேட்ஸ் Bling 777 உங்களுக்கு அறிமுகப்படுத்துகிறோம். சாரா சகீல் உருவாக்கிய புகைப்படம்" என டிவிட்டர் பதிவில் கூறியுள்ள விமான நிறுவனம் இது வெறும் புகைப்படம் தான் உறுதிபடுத்தியுள்ளது. சாரா சகீல் எனும் கலைஞரால் முதலில் இந்த புகைப்படம் இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்டது. 4.8 லட்சம் பின்தொடர்பவர்கள் இருக்கும் அவரின் இன்ஸ்டா பக்கம் தனில், சாதாரணமானவற்றை மின்னும் மற்றும் ஒளிரும் வகையில் மாற்றியுள்ள கண்கவர் புகைப்படங்கள் நிரம்பியுள்ளன. 

டிசம்பர் 4 அன்று சாரா இந்த விமானத்தின் புகைப்படத்தை பதிவிட்ட நிலையில், இதுவரை 54000 லைக்குகள் பெற்று அசத்தியுள்ளது. இதன் மூலம் அவரின் பாகிஸ்தான்-மிலன் விமான பயணத்திலும் மேம்பட்ட டிக்கெட் பெற்றார்.

இவரின் புகைப்படத்தை பெரிதும் விரும்பிய எமிரேட்ஸ் நிறுவனம், வேறு எதுவும் செய்யவில்லை எனினும், படத்தை டிவீட் செய்தனர். செவ்வாய்கிழமையில் இருந்து இதுவரை அந்த டிவீட் 12000க்கு மேற்பட்ட லைக்குகள், 4000க்கு மேற்பட்ட ரீடிவீட்கள் பெற்றுள்ளது. இந்த புகைப்படத்தை பார்த்த மக்களால் அமைதியாகவே இருக்க முடியவில்லை. வைர விமானத்தைப் பற்றிய தங்களது கருத்துகளை தெரிவித்து சமூகவலைதளத்தை தெறிக்கவிடுகின்றனர்.


"இது உண்மையா" என ஒருவர் கேட்கிறார்."இது உண்மையாகவே பறந்ததா அல்லது சிறிய அளவிலான மாதிரியா அல்லது கணிணி மூலம் உருவாக்கப்பட்ட புகைப்படமா" என மற்றொருவர் ஆச்சர்யப்படுகிறார். "இயற்பியல் மற்றும் ஏரோடைனமிக்ஸ் உடன் விளையாடுகிறீர்களா" என கேட்கிறார் ஒருவர். மற்றொருவரோ "அர்த்தமற்றது மற்றும் பகட்டானது, இருக்கைகளை புதுப்பித்து வசதியானதாக வழங்குவதில் கவனம் செலுத்த வேண்டும்" என்கிறார். பெரும்பாலானோர், இது அழகானது, அற்புதமானது என புகழ்ந்து தள்ளுகின்றனர்.

Read more at: https://tamil.gizbot.com/news/diamond-studded-plane-wows-internet-heres-the-story-behind-viral-photo-020123.html



No comments:

Amazon

அதிகம் படிக்கபட்டவை: Featured Posts

SBI Clerk Recruitment 2019: Dates

SBI Clerk 2019 Exam Highlights Exam Name                                      SBI Clerk 2019 Exam Conducting Body                 ...