ஆண்ட்ராய்டு சாதனத்தில் ரீடிங் மோடு பெறுவது எப்படி?
ஒன் பிளஸ் 5 இல் பல்வேறு அம்சங்கள் உடன் கூடியதாக உள்ளது. ஒன் பிளஸ் சாதனங்கள் கைக்கு அடக்கமாக இருப்பவையாக இருந்தாலும், அவற்றில் எண்ணற்ற அமசங்களை தாங்கியவையாக உள்ளதோடு, மற்ற பல நிறுவனங்களுக்கும் முன் மாதிரியாக திகழ்கின்றன. ஒன் பிளஸ் 5 சாதனம் ரீடிங் மோடு கொண்டதாக அறிமுகம் செய்யப்பட்டது. இதன்மூலம் இந்த முழு சாதனமும் படிப்பதற்கு ஏற்ற வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
கிரே ஸ்கேல் மேப்பிங், ப்ளூயீஸ் லைட் டின்ட் மற்றும் பிற சிறிய காரியங்கள் மூலம் உங்கள் ஆண்ட்ராய்டு சாதனத்தில் படிக்கும் அனுபவத்தை மேலும் இன்பம் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
கிரே ஸ்கேல் மேப்பிங், ப்ளூயீஸ் லைட் டின்ட் மற்றும் பிற சிறிய காரியங்கள் மூலம் உங்கள் ஆண்ட்ராய்டு சாதனத்தில் படிக்கும் அனுபவத்தை மேலும் இன்பம் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

1) டெவலப்பர் தேர்வுகள்
a) இந்த செயல்பாட்டை துவங்கும் முன் உங்கள் ஆண்ட்ராய்டு சாதனத்தில் உள்ள டெவலப்பர் தேர்வுகளை முடுக்க வேண்டும்.
b) டெவலப்பர் தேர்வுகளை முடுக்குவதற்கு, ஆண்ட்ராய்டு அமைப்புகளுக்கு உள்ளே சென்று, ஃபோன் அமைப்புகளை கண்டறிய வேண்டும். அதற்கு அடுத்த திரையில், வருவதில் தொடர்ந்து 7 முதல் 8 முறை வரை தொடர்ந்து கட்டமை என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
c) டெவலப்பர் தேர்வுகளை முடுக்கிய பிறகு, போலியான கலர் இடவசதி அமைப்புகள் என்று அழைக்கப்படும் தேர்வை கண்டறிய வேண்டும். அதன் மீது கிளிக் செய்த பிறகு, உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப மோனோகிரோமாசி என்பதை தேர்ந்தெடுக்க வேண்டும். இப்படி செய்வதன் மூலம் உங்கள் சாதனத்தில் கிரே ஸ்கேல் விளைவை அடைய உதவும். இதை ஒன் பிளஸ் 5 சாதனத்தில் உள்ள ரீடிங் மோடு தன்மையை ஒருவர் அடைவதை ஒத்ததாக உள்ளது. அதே வழியில் இந்த விளைவை மீண்டும் தவிர்க்க முடியும்.

2) கூகுள் கிரோம்
a) உங்கள் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனில் உள்ள கூகுள் கிரோம் ப்ரோஸரை அணுகவும், chrome://flags என்பதை URL பாரில் உள்ளீடு செய்யவும்.
b) அடுத்தப் படியாக ரீடர் மோடு என்பதை முடுக்கி விடுவதை நீங்கள் தேடி கண்டுபிடிக்க வேண்டும். இதற்கு நீங்கள் செய்ய வேண்டியது என்னவென்றால், தேடல் தேர்வை திறந்து, அதற்காக தேடலை நடத்த வேண்டும். அதை "எப்போதும்" என்று அமைத்து கொள்ள வேண்டும். திரும்ப ப்ரவுஸரை இயக்கும் போது, "இந்த பக்கத்தை மொபைல் ப்ரெண்ட்லி ஆக்கு" என்ற செய்தியை நீங்கள் இணைய பக்கத்தின் கீழே காணலாம். இதன் பிறகு நீங்கள் செய்ய வேண்டியது என்னவென்றால், அதன் மீது தட்டி, இணையப் பக்கத்தை ரீடர் மோடு என்பதில் திறக்க வேண்டும். இதே போன்ற ரீடர் மோடு அனுபவ பெற, ஒரு மூன்றாம் தரப்பு அப்ளிகேஷனான டிவிலைட் என்பதன் மூலம் கூட பெற முடியும்.

3) க்ரோமின் அணுகல் அமைப்புகள் படிப்பை உந்தும் மோடு உங்களால் கண்டுபிடிக்க முடியாமல் போகும் பட்சத்தில், கீழ்க்கண்ட முறையை பயன்படுத்தி, பயன்பாட்டிற்கு உரிய ரீடல் மோடு அனுபவத்தை இயக்கி கொள்ள க்ரோமின் அணுகல் அமைப்புகள் உட்படுத்தி பெறலாம். இந்த முறையில் கிடைக்கும் மற்றொரு பெரிய நன்மை என்னவென்றால், வேறெந்த மூன்றாம் தரப்பு அப்ளிகேஷன்களையும் நீங்கள் அணுக வேண்டிய தேவை ஏற்படுவது இல்லை.
a) உங்கள் க்ரோம் ப்ரவுஸரை நவீன பதிப்பிற்கு மேம்படுத்தவும். கூகுள் ப்ளே ஸ்டோர் மூலம் இதை நீங்கள் எளிதாக செய்து கொள்ள முடியும்.
b) ஆண்ட்ராய்டில் இருப்பது போல உங்கள் கூகுள் க்ரோம் ப்ரவுஸரை திறக்கவும். அதன் பிறகு மூன்று புள்ளிகள் கொண்ட மெனு மீது கிளிக் செய்து, அணுகலை தேர்ந்தெடுக்கவும்.
c) அணுகல் அமைப்புகள் என்பதன் கீழே காணப்படும் எளிமையான பார்வை என்ற தேர்வை முடுக்கவும்.
d) தற்போது எளிமையான பார்வை வசதியை கொண்ட நீங்கள் பயன்படுத்தும் எந்தொரு இணைய பக்கத்திலும் ஒளிர்ந்த, கறுத்த மற்றும் ஸ்பியா அமைப்பை தேர்ந்தெடுக்க முடியும். படிக்க விரும்பினால், ஸ்பியா என்பதை தேர்ந்தெடுக்க வேண்டியது அவசியம்.

ஒன் பிளஸ் 5 இணையதள பக்கங்களை ஆதரித்து கொண்டு, எளிமையான பார்வை வசதியை, கூகுள் க்ரோம் ப்ரவுஸர் தானாக ஆக்டிவேட் செய்து கொள்ளும். க்ரோம் மேனுவின் கீழ் உள்ள தோற்றம் என்ற ஒரு தேர்வையும் கூட பயனர்களுக்கு அளிக்கப்படுகிறது. இங்கிருந்து கலர் பில்டரை நீங்கள் மாற்றி அமைத்து கொள்ளலாம். ஒன் பிளஸ் 5 சாதனத்தில் அளிக்கப்படுவது போன்ற ஒரு ரீடிங் மோடு வசதியை பெற, கூகுள் ப்ளே ஸ்டோரில் எண்ணற்ற மூன்றாம் தரப்பு கருவிகள் கிடைக்கின்றன. இதை கூட நீங்கள் பயன்படுத்தி இந்த வசதியை பெற முடியும்.
No comments:
Post a Comment