தமிழ்நாட்டிற்கும் கேரளாவிற்கும் என்னதான் பூர்வ ஜென்ம பாசமோ தெரியல அங்கு நடக்கும் நிகழ்வுகள், திரைப்படங்கள், மற்றும் பாடல்கள் என அனைத்தும் தமிழ்நாட்டில் ட்ரெண்டாகி வருகிறது. மேலும், கேரளா சம்பந்தமாக வெளியாகும் பல்வேறு விஷயங்கள் தமிழ்நாட்டில் டிரெண்டாகி வருகிறது.
அந்த வகையில், கடந்த 2016ஆம் ஆண்டு வெளியான பிரேமம் திரைப்படம் தமிழகத்தில் வெளியாகாமலே இளைஞர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. மேலும், கடந்த வருடம் வெளியான ஜிமிக்கிகம்மல் பாடல் பெரும் வைரலாக பரவியது. பின்னர்தான் அந்த பாடல் இந்தியா முழுவதும் பரவியது. அதையடுத்து, 'ஒரு அடோர் லவ்' என்ற திரைப்படத்தின் டீசரில் நடிகை பிரியா வாரியார் கைவிரலை துப்பாக்கியாக சுடும் வீடியோ இந்தியா அளவில் டிரெண்டானது.
இந்நிலையில் இயக்குநர் சுந்தர் சி தயாரிப்பில், அறிமுக இயக்குனர் இயக்கும் நட்பே துணை என்ற படத்திற்கு ஹிப்ஹாப் தமிழா ஆதி இசையமைத்துள்ளார். இந்த படத்தில், கேரளா பாடல் என்ற பாடல் கடந்த 13ம் தேதி யூடியூபில் வெளியாகி ஹிட்டடித்துள்ளது. இது வரை அந்த பாடலை 17 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் பார்த்து வருகின்றனர்.
இந்த பாடலில், தமிழக இளைஞன் ஒருவர் கேரளா பெண்ணை பார்த்து பாடுவது போல உள்ளது. தற்போது, இந்த பாடல் தமிழ்நாடு மட்டும் அல்ல கேரளாவிலும் வைரலாக பரவி வருகிறது. இதுபோல தமிழ்நாட்டிற்கும், கேரளாவிற்கும் இடையே பல விஷயங்கள் தொடர்ந்து வைரலாகி வருகிறது.
No comments:
Post a Comment