You can do it?? You got a 72 lakhs.... - Todays News

             Todays News

Political News, World News, Jobs, Education, District News, Current Affairs, Health Tips, Beauty Tips, Science, Technology, Samayal Tips.

Amazon

Dec 17, 2018

You can do it?? You got a 72 lakhs....



ஸ்மார்ட்மொபைல் போன் பயன்படுத்தாமல் இருந்தால் ரூ.72 லட்சம் பரிசு: தனியார் நிறுவனம் அதிரடி அறிவிப்பு


ஸ்மார்ட்மொபைல் போன் பயன்பாட்டை ஒரு ஆண்டு பயன்படுத்தாமல் தியாகம் செய்பவருக்கு அதிகபட்சம் ரூ.72 லட்சம் பரிசு வழங்குவதாக விட்டமின்வாட்டர் எனும் தனியார் நிறுவனம் அறிவித்துள்ளது. 

போட்டியாளர்கள் செய்ய வேண்டியது ஒரு ஆண்டுக்கு ஸ்மார்ட் போனை பயன்படுத்துவதை நிறுத்திவிட்டு, தங்கள் எண்ணிற்கு வரும் அழைப்புகளுக்கு 1996 ஆம் ஆண்டுகளில் வந்த சாதாரண போனை பயன்படுத்திக்கொள்வது மட்டுமே.


ஸ்மார்ட்போன் பயன்பாடு நாளுக்கு அதிகரித்து வருவதைத் தெளிவாக தெரிந்து வைத்திருக்கும் தனியார் நிறுவனமான விட்டமின்வாட்டர் நிறுவனத்தின் கோகோ கோலா, ஸ்மார்ட்போன் பயன்பாட்டை தியாகம் செய்யும் முனைப்பு கொண்டவர்களுக்கு சவால் விடும் வகையில், ஒரு ஆண்டுக்கு ஸ்மார்ட்போன் பயன்படுத்தாமல் இருப்பவருக்கு ரூ.72 லட்சம் பரிசு தொகை வழங்குவதாக புதுவித போட்டியை அறிவித்துள்ளது.
இதற்கு நீங்கள் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்றுதான். 

அதாவது, போட்டியில் பங்கேற்க விரும்புவோர் விட்டமின்வாட்டர் நிறுவனத்திடம் ஸ்மார்ட்போனில் இருந்து ஏன் உங்களுக்கு இடைவெளி வேண்டும் என்பதை விளக்கும் தகவல் மற்றும் ஸ்மார்ட்போன் இல்லாத நேரத்தில் நீங்கள் என்ன செய்வீர்கள் என்ற கேள்விக்கான பதில்களை டைப் செய்து அதனை டுவிட்டர் அல்லது இன்ஸ்டாகிராமில் பதிவிட வேண்டும். கேள்விக்கான பதில்களுடன் #nophoneforayear மற்றும் #contest என்ற ஹேஷ்டேக் சேர்த்து பதிவிட வேண்டும். போட்டியில் கலந்து கொள்ள விரும்புவோர் 2019 ஜனவரி 8 ஆம் தேதிக்குள் டுவிட்டர் அல்லது இன்ஸ்டாகிராம் மூலம் பதிவிட வேண்டும்.

பின்னர் நிறுவனம் சார்பில் தேர்வு செய்யப்படும் போட்டியாளர்களுக்கு அழைப்புகளை மேற்கொள்ளும் வசதி கொண்ட மொபைல் போன் வழங்கப்படும்.

போட்டியில் கலந்து கொள்வோர் ஒரு ஆண்டுக்கு நிறுவனம் சார்பில் வழங்கப்படும் மொபைல் போன் மட்டுமே பயன்படுத்த வேண்டும். இதுதவிர லேப்டாப், கணினி, அமேசான் அலெக்சா, கூகுள் முகப்பு போன்ற சாதனங்களின் பயன்படுகளை தொடரலாம். எனினும், ஸ்மார்ட்மொபைல் போன் மற்றும் டேப்லெட் போன்ற சாதனங்களை பயன்படுத்தக்கூடாது.

விட்டமின்வாட்டர் சார்பில் போட்டியாளர் ஜனவரி 22 ஆம் தேதிக்குள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கான பழைய மொபைல் போன் வழங்கப்படும். ஒரு வருடம் முழுக்க ஸ்மார்ட்போன் பயன்படுத்தவில்லை என்பதை விட்டமின்வாட்டர் உண்மை கண்டறியும் சோதனை நடத்தப்பட்டே பரிசு தொகையான ரூ.72 லட்சமும், போட்டியின் காலத்தை ஆறு மாதமாக தேர்வு செய்து வெற்றி பெறுவர்களுக்கு ரூ.7.2 லட்சமும் பரிசுத்தொகையாக வழங்கப்படும் என தெரிவித்துள்ளது.

No comments:

Amazon

அதிகம் படிக்கபட்டவை: Featured Posts

SBI Clerk Recruitment 2019: Dates

SBI Clerk 2019 Exam Highlights Exam Name                                      SBI Clerk 2019 Exam Conducting Body                 ...