4 ரூபாய் முழுசாப்பாடு உணவகம் போட்டி நடிகைகளை எதிர்கொள்ள ரோஜா புதுயுக்தி,,,,,,
திரைப்பட நடிகைகள் அதில் ஈட்டும் பணத்தை வேறு தொழில்களில் முதலீடு
செய்கின்றனர். ரகுல் ப்ரீத் சிங் உடற்பயிற்சி கூடங்கள் நடத்துகிறார்.
தமன்னா தனது வருமானத்தை தங்கத்தில் முதலீடு செய்திருப்பதுடன் அவரே சொந்தமாக
நகைகளை டிசைன் செய்யும் தொழில் மேற்கொண்டிருக்கிறார். பிரணிதா பெங்களூரில்
பூட்லெக்கர் என்ற வாட்டர் பிஸ்னஸ் தொடங்கி உள்ளார். லாப நோக்கில்
வர்த்தகத்தில் ஈடுபட்டிருக்கும் இவர்களுக்கு மத்தியில் சேவை நோக்கத்துடன்
உணவகம் திறந்திருக்கிறார் நடிகை ரோஜா. ஆந்திரா அரசியலில் ஈடுபட்டிருக்கும்
நடிகை ரோஜா, ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் நகரி தொகுதி எம்எல்ஏவாக
உள்ளார். அடிக்கடி ஆர்ப்பாட்டம், போராட்டங்களில் ஈடுபட்டு பரபரப்பை
ஏற்படுத்தும் ரோஜா சமீபத்தில் தனது பிறந்த தினத்தையொட்டி தன்னுடைய
தொகுதியில் மலிவு விலை உணவகம் திறந்திருக்கிறார்.
இந்த உணவகத்தில் முழுசாப்பாடு விலை ரூ 4 மட்டுமே. இது அப்பகுதி ஏழை எளிய மக்களை பெரிதும் கவர்ந்திருக்கிறது. ஆந்திராவில் அடுத்த ஆண்டு தேர்தல் நடக்கவுள்ளநிலையில் ரோஜா திறந்திருக்கும் மலிவு விலை ஓட்டல் அவருக்கு கூடுதல் இமேஜை ஏற்படுத்தியிருக்கிறது. ரோஜாவுக்கு எதிராக களத்தில் நிற்க நடிகை வாணி விஸ்வநாத் உள்ளிட்ட சில நடிகைகள் தயாராக உள்ள நிலையில் அவர்களை எதிர்கொள்ளும் வகையில் இந்த யுக்தியை ரோஜா பயன்படுத்தி இருக்கிறார் என்று கூறப்படுகிறது. எது எப்படி இருந்தாலும் ஒரு இட்லியே ரூ 10 முதல் 15 வரை விற்கும் நிலையில் முழுசாப்பாடு 4 ரூபாய்க்கு கிடைப்பது உண்மையிலேயே பயன் உள்ள விஷயம் என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்திருக்கின்றனர்.

No comments:
Post a Comment