
நடிகர் ஆர்யா தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் வளர்ந்து வரும் நடிகை ஒருவரை திருமணம் செய்யவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழ் மற்றும் தெலுங்கில் வளர்ந்து வரும் இளம் நடிகை ஒருவரை ஆர்யாகாதலித்து வருவதாகவும், விரைவில் அவருக்கு திருமணம் நடைபெறவுள்ளது என்றும் தகவல்கள் வெளிவந்துள்ளன.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக உள்ள ஆர்யா, பெண்கள் வசீகரம் செய்யும் கனவு நாயகனாக வலம் வருகிறார். இவர் விரைவில் திருமண பந்தத்தில் இணையவுள்ளதாக கூறப்படுகிறது.

கஜினிகாந்த் படத்தில் அறிமுக நாயகி சாயீஷா சிஹெல்லுடன் இணைந்து நடித்த ஆர்யா தற்போது சூர்யாவின் காப்பான் படத்திலும் அவரும் சேர்ந்து நடித்து வருகிறார்.
இதனால் அவரும், ஆர்யாவும் காதலித்து வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. ’காப்பான்’ திரைப்படம் வெளியான பிறகு, ஆர்யா மற்றும் சாயீஷா திருமணம் தொடர்பாக அறிவிப்பு வெளிவரலாம் என சொல்லப்படுகிறது.
ஆர்யாவின் நெருங்கிய நண்பரான விஷால், ஆந்திர தொழிலதிபர் மகளை திருமணம் செய்யவிருப்பதாக தகவல்கள் வெளியான நிலையில், ஆர்யாவின் திருமண செய்தியும் சமூக வலைத்தளங்களில் உலா வருகிறது. இம்முறையாவது ஆர்யா திருமணம் செய்துக் கொளவாரா அல்லது இது வெறும் வதந்தியா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
Keywords: ஆர்யா திருமணம் | ஆர்யா | Sayeesha | arya wedding | arya | Actor Arya Marriage
Web Title: arya marrying south actress soon says sources
No comments:
Post a Comment